பக்கம் எண் :

8. கூளி கூறியது 79

522.

ஒருங்கி யாவினையும் விட்டவர் விட்டார்
      ஒன்று விட்டிலரும் விட்டில ரோடி
மருங்கு மல்கிவரு சைவல மொப்ப
      வந்து மூடிவிடும் வழியது வாக.

(255)
 

 

523.

உறவ தாகுமிழி பந்தம தோடே
      உற்ற பந்தமவை யெத்துணை யேனும்
துறவ தாகும்யம தண்டமெ டுத்தே
      துகள்ப டும்படி தகர்த்தடல் வேனால்.

(256)
 

வேறு

 

524.

பரவியெதிர் விவகார பராமுகனார் பகருதலும்
      பகரொ ணாத
வரகுணனா கியசாந்தன் வாய்புதைத்துத் தனதாண்மை
      வகுப்ப னேயால்.

(257)
 

சாந்தன் கூற்று

525.

குலனில்லேன் வலனில்லேன் புகழில்லேன் மேலாய
      குணனு மில்லேன்
புலனில்லே னலனில்லே னெனப்பணிந்து மதத்தன்வலி
      போக்கு வேனால்.

(258)
  

526.

அறம்புரியே னறந்திறம்பா வரும்பொருளீட் டிலன்காதல்
      அமைந்த காமத்
திறம்புரியேன் வீடில்லே னெனத்தாழ்ந்து மதத்தனுரை
      செகுப்ப னேயால்.

(259)
  

527.

தவம்புரியே னிரப்பவர்க்கொன் றேதேனு மளித்தறியேன்
      சார்பு மில்லேன்
அவம்புரிவே னலனல்லே னெனவடங்கி மதத்தனடல்
      அழிப்ப னேயால்.

(260)
  

528.

பொல்லாரோ டிணங்கவல்லேன் போவதுவு மாவதுவும்
      புத்தி செய்யேன்
நல்லாரோ டிணங்குகிலே னெனத்தாழ மதத்தனடு
      நடுங்கு வானால்.

(261)

522. சைவலம் - நீர்ப்பாசி.

525. வலன் - வெற்றி. புலன் - அறிவு.

527. சார்பு - பெரியார் துணை.

பி - ம். ‘அவம்புரியேன்’