பக்கம் எண் :

78 பாசவதைப் பரணி

 

விவகாரபராமுகன் கூற்று

 

517.

அளவி லாதசன னங்க டோறுநம்
      அளவி லாமல்வரு மன்னையு மத்தனும்
பிளவி லாதவரை யொப்பதை யன்றிப்
      பிறிது முண்டுகொ லாமிது பொழுதினும்.

(250)
   

518.

புழுவு திக்கு முடம்பின் மலத்திற்
      புக்கு டன்புழுவ தொப்பதை யன்றி
வழுவு திக்கு முடம்பினை யொப்ப
      வந்து தித்த புழுக்களும் வேறோ.

(251)
  

519.

இன்னு மேதிலர்கண் முன்னும தொப்பார்
      இரண்டு நாளையிடை வாழ்பவ ரன்றோ
அன்னை தாதைமனை யன்புறு மைந்தர்
      ஆதி யாயகிளை யாவையு மன்றே.

(252)
   

520.

சுற்ற முற்றுமொரு கொள்ளி கொளுத்தித்
      தூர நின்றகல்வ ராருற வாவார்
சற்று முற்றவுட லும்முத வாதாற்
      றாம லாமலுற வேது தமக்கே.

(253)
   

521.

அலைய டங்கவினி யாடுது மென்னா
      ஆழி யின்கரை யணைந்தவ ரொப்பார்
நிலைய டங்கமனை வாழ்வி லிருந்தே
      நீத்து நாமென நினைத்துழல் வாரே.

(254)

517. “அத்தனொ டன்னைக் கன்புசெய் கின்றா ரளவில் பிறப்புற் றவையவை தோறும், எத்தனை தாயுந் தந்தையு முற்றா ரித்தனை யன்றோ விவர்களு மிங்கே”(அஞ்ஞ. ) ; “அன்புற்று மாதாபி தாவென்னு மவர்தாம், முன்பெற்ற சென்மங்கள் முடிவில்லை யவைதோ, றின்புற்ற தாய் தந்தை யெங்கேய தன்றோ, பின்பெற்ற பேரும் பெறத்தக்க பேறே” பிரபோத. நிருப. 48.

518. புழுக்களென்றது குழந்தைகளை; “சால வுதிக்கும் புழுவுட றன்னில் தகவின் மலத்தோ டொழுகு முடம்பே, போல வுதிக்கும் புழுவினை யென்னே புத்திர னென்றே புந்திசெய் வாரே” (அஞ்ஞ. ); “சடமீது கிருமிப்பை தானென்றன் மலமோ, டிடர்மேவு புண்ணோ டெழக்கண்ட துண்டே, உடன்மீதிவ் வுடல்போ லுதிக்கின்ற புழுவைத், திடமான மகவென்று சீராட்ட லென்னே” பிரபோத. நிருப. 50.

520. “தம்முற வாவார் தாமல தின்றே” (அஞ்ஞ. ); “தாமேயல் லாதெவர் தமக்குரியர் தாமே” பிரபோத. நிருப. 49.

521. நீத்தும் - துறப்போம். நாலடி. 332.