508. | பேய்விண்டு கேட்டாலும் பெரிதுமுவந் தருள்வதன்றி வாய்விண்டு கேட்பாரோ மாசற்ற நாவுடையோர். | (241) | | | | | 509. | திருந்தித்தாம் வளனெய்திச் சிறப்புறுமா றெண்ணாரோ வருந்தித்தா முழந்தாலும் வாராது வாராதால். | (242) | | | | | 510. | எத்துணையும் போகங்க ளெய்திடினு மாசையுண்டேல் அத்துணையு மேன்மேலு மவாய்நிற்ப தமையாதால். | (243) | | | | 511. | ஆராத பேராசை யற்றவரே மற்றெவர்க்கும் வாராத பேரின்ப வளனெய்து மாட்சியரால். | (244) | | | | 512. | ஏகாத நல்குரவு மின்பமெனக் கொண்டிரக்கப் போகாத புகழன்றோ புகழினுக்கும் புகழாதல். | (245) | | | | 513. | சாம்போது படைத்தபொரு டானெங்கே யிவனெங்கே போம்போது வெவ்வேறாப் போவதுமப் பொருளேயால். | (246) | | | | 514. | ஓதினால் வயிறுள்ள தொருசாணே யொருசாணும் ஏதினா லமையாதா லெவன்கொலோ வெவன்கொலோ. | (247) | | | | 515. | நிராசையெனுஞ் சுடர்வாளா னேரெதிர்ந்த வுலோபனைநான் பராசயமொன் றில்லாமற் பற்றியடல் புரிவேனால். | (248) | | | வேறு | 516. | மாறு கொண்ட வுலோபனை வெல்வகை வணங்கி நின்றுசந் தோடன் வகுத்தலும் வீறு கொண்ட விவகார பராமுகன் வெய்ய மோகனமர் வெல்வகை சொல்லுவான். | (249) |
508. “புன்பாவி வாணாள் புலர்ந்தாலு மெய்வெள், ளென்பா யுகுந்தாலு மில்லாமை யென்னும், வன்பாடு நல்லோர்கள் வாய்விண்டு தம்மேல், அன்பாளர் தம்பாலும் அறியச்சொ லாரே” பிரபோத. நிருப. 43. 509. “வருந்தி யழைத்தாலும் வாராத வாரா” (வாக்குண்டாம்); “வருந்தினும் வாராது வாராது தானே” (அஞ்ஞ. ) ; “வாராத தார்தாம் வருந்தினும் வராதே” பிரபோத. நிருப. 41. 512. “இல்லாத பொழுதின்ப மிஃதென்று பிறர்பாற், செல்லாத செல் வென்ப செல்வாய செல்வே” அஞ்ஞ. 514. “வாதாகி நுகர்கின்ற வயிறுள்ள தொறுசாண், ஏதாலி தமை யாதி தென்னேயி தென்னே” (அஞ்ஞ. ); “அண்டாத பேராவ லமையாத தென்னே, விண்டாவு மலைபோல வேண்டுங்கொல் வெண்சோ, றுண்டாலும் வயிறுள்ள தொருசா ணிதற்கோ, கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே” பிரபோத. நிருப. 44. |