501. | வன்சொல்லால் வைதாரை வாழ்த்தினர்போல் மதித்தென்றும் இன்சொல்லா லவர்பகைதா னிடிப்பதன்றோ வெனதாண்மை. | (234) | | | | | 502. | வறுத்தாலு மிடித்தாலும் வாளதனான் மயிர்தோறும் அறுத்தாலு மியல்பென்னு மதுவன்றோ வவிரோதம். | (235) | | | | 503. | மிகைகொண்டு கடுங்கோபன் மேல்வருங்கா லவனையிள நகைகொண்டு வென்றுவிடு மதுவன்றோ நல்லாண்மை.. | (236) | | | | | 504. | வசையேது வசையல்லா வாழ்த்தேது வாழ்வென்னும் நசையேது நசையல்லா நலிவேது நாடுங்கால். | (237) | | | | | 505. | தமராவார் பிறராவார் தாமற்றா லென்னுடனே அமராவார் பிறரேயோ வடுங்கோப னாரேயோ. | (238) | | | | | 506. | இவ்வாறு பொறையனெடுத் தியம்புதலு மடிவணங்கிச் செவ்வாறு செப்புவான் செப்பரிய சந்தோடன். | (239) | | | சந்தோடன் கூற்று | | 507. | நிலையாய பேரின்ப நிரதிசயப் பொருளுடையார் தொலையாய வழிபொருளும் பொருளாகச் சூழ்வாரோ. | (240) |
ராங் கயவர் கைமிகத், தீதுறும் வாசகஞ் செப்பி னாலெதிர், வாய்திற வாமையா மௌன மன்றிவே, றேததை வெல்வதற் கியன்ற செய்கையே” பிரபோத. நிருபகாதியர் வீர. 28. 501. “வைததனை யின்சொல்லாக் கொள்வானும்” (திரிகடுகம், 48); “வைதாரை வாழ்த்தினர்போன் மதித்தென்று மறக்கொடுமை, செய்தாரை யறியாத செயலன்றோ செயலாதல்” அஞ்ஞ. 503. “முனிவெனுங் கொடுந்தழல் மூண்ட போததிற், பனிவருந் தண் புனல் பரவி னாலென, நனிமுக மலர்ந்துமா நகைபு ரிந்துநல், இனியசொல் லவர்க்கெதி ரியம்பல் செய்வனே” பிரிபோத. நிருபகாதியர். 29. 505. “இகழாவ தேது புகழேது தேரி லிவையாவு மாவதுரையே, அகழ்வார்க ளியாவ ரருள்வார்க ளியாவ ரநுபோக மாகு மவையே” அஞ்ஞ. 507. தொலைஆய-தொலைதலாகிய. அழிபொருள்-அழிகின்ற பொருள்; மிக்கபொருளுமாம். “நன்றுந்திய நெஞ்சத்திடை நாடித்தெளி வுற்றே, என்றுந்தனி நிலைபெற்றிடு மின்பப்பொரு ளுடையார், துன்றும்பெரு வெள் ளத்திடை தோன்றுங்குமி ழியைப்போற், பொன்றும்பொரு ளையுமேயொரு பொருளாய்நினை வாரோ” (பிரபோத. நிருபகாதியர். 58); “என்றும் பொருவரிய வின்பப் பொருளுடையார், பொன்றும் பொருளும் பொருளாகப் போற்றுவரோ” அஞ்ஞ. |