491. | தசைநிரம்பி யெழும்புடைப்பிரு சயிலமென்பர் சழக்கரே நசைநிரம்பி யனங்கனுக்குளம் நைந்துநொந்தற நலிவரே. | (224) |
| | வேறு | |
492. | சிறுமைபுரி சேயிழையார் சிங்காரங் களுமொன்றா மறுமைபுரி மாதவரு மதிப்பரோ மதியாரால். | (225) |
| | | |
493. | சல்லாபம் பெற்றபெருந் தனிநடையார் தடமுலையார் உல்லாச நடையினையு மொன்றாகக் கொள்வாரோ. | (226) |
| | |
494. | மெய்யாய வுரைபயில்வார் விளங்கிழையார் விளம்புகின்ற பொய்யாய வுரையையுமோர் பொருளாகப் போற்றுவரோ. | (227) |
| | |
495. | முற்றின்ப முற்றிருக்கு முனீந்திரரு மொய்குழலார் சிற்றின்ப மற்றதுமோர் சிறப்பாகச் செறிவாரோ. | (228) |
| | |
496. | இயலாய நோக்கினையே யெய்தினோ ரேந்திழையார் மயலாய நோக்கினையு மற்றொன்றா மதிப்பாரோ. | (229) |
| | |
497. | ஓங்குகொடி மதவேளுக் குறுமீனம் படைமடவார் தாங்குகொடி வாய்மைபடை தயிரியமென் சக்கிரமால். | (230) |
| | |
498. | தையலா ருடற்பாவை தானொன்றிற் படும்படவே மையலார் வேளுயிரு மாளுமொரு நொடிவரையின். | (231) |
| | வேறு |
499. | இனைய வண்ண நிருபகன் கைதொழு திறைவன் பாத மிறைஞ்சி யுரைத்தலும் அனைய வண்ணம் பொறையன் முதல்வன தடிவ ணங்கி யறிய விளம்புவான். | (232) |
| | பொறையன் கூற்று |
| | வேறு | |
500. | தீதுறுநா வுடையார்கள் சீறுவரே லவர்களுடன் வாய்திறவா திருந்துவிடு மதுவன்றோ வன்பாதல். | (233) |
497. மதவேளுக்குக் கொடி மீனம் என்க.
498. படும் - அழியும். “பூவைமார்பொடி யாகவேபொடி யாகி வேளு யிர் போகுமே” அஞ்ஞ.
500. “மாசாய நாவுடையார் வாய்திறந்தா லவர்களுடன், பேசாம லிருந்துவிடு மஃதன்றோ பெருந்தகைமை” (அஞ்ஞ. ), “காய்தறு கண்ண