484. | பாசிபற்றிய புரையைமென்குமிழ் பகரினொக்கும தென்பரே வேசிபற்றிய பொழுதுமால்வழி விட்டசிந்தையின் மெலிவரே. | (217) | | | | | 485. | கோழையூறிய வாய்விளிம்பொரு கொவ்வையென்று குறிப்பரே ஏழைமானிட ராயினார்சிலர் இருமைதானு மிழப்பரே. | (218) | | | | 486. | வெய்யபல்லெனும் வெள்ளெலும்பினை மெல்லென்முல்லை யரும்பொடு துய்யநித்தில மொக்குமென்றணி சொல்லுவார்சில சுமடரே.. | (219) | | | | | 487. | ஊத்தையாகிய வாயையாம்பலை ஒக்குமென்ன வுரைப்பரே சீத்தையாகிய வேண்மலர்க்கணை சிந்தைநொந்து திகைப்பரே. | (220) | | | | | 488. | புலவறாம லிடந்தொறுஞ்செறி புரைகடுற்றமு கத்தினை நிலவறாம லெழுந்தசந்திரன் நிகர்க்குமென்பவர் நீசரே. | (221) | | | | | 489. | துளைபடுங்கள மதனைமுத்தணி சுரிமுகப்பணி லம்பசும் கிளைபடுங்கமு கென்பர்மாய கிலேசமேவுமி லேசரே. | (222) | | | | | 490. | தோல்பொருந்திய தடியைநல்லதொர் தூயவேயிணை சொல்வரே மால்பொருந்திய நெஞ்சராகி மயங்குவார்சிலர் மனிதரே. | (223) |
484. புரை என்றது மூக்கை. மால் - மயக்கம். 485. வாய்விளிம்பென்றது இதழை ; “எச்சிறங்கு வாய்விளிம்பு பவளமென்பர்.” பிரபோத. நிருபகாதியர். 11. 486. “தரளமென்ப...... பழுதுறும்பல் லென்பை யின்ன பகர்வதென்ன பாவமே. ’ பிரபோத. நிருபகாதியர். 10. |