477. | விழுக்கொடு வெண்ணஞ் சல்லா உகிர்மயி ருமிழ்கட் பீளை புழுப்பயில் கின்ற பொல்லாப் புலாற்பொதி யதுவே யன்றோ. | (210) |
| | | |
478. | வாய்மையொன் றிலாத புல்லர் மயங்குவர் துளும்பு புண்ணீர்த் தூய்மையொன் றிலாத புன்றோற் றுருத்திதா னதுவே யன்றோ. | (211) |
| | வேறு | |
479. | சிக்கறாது சுருண்டுநாறிய செறிமயிர்த்திர ளதனைநீர் மிக்கறாது திரண்டகாரென வினவுவார்சிலர் வீணரே. | (212) |
| | |
480. | கறையழுக்கொடு வேர்வைதுற்றிய கடியநெற்றியை நெடியவெண் பிறையொழுக்கம தென்றுமால்கொடு பேசுவார்சிலர் பேயரே. | (213) |
| | |
481. | ஊழல்கொண்டு குறும்பிபற்றிய ஊன்முடக்கினை யுயர்தரு நீழல்கொண்டுல வூசலென்று நிகழ்த்துவார்சில நீசரே. | (214) |
| | |
482. | புல்லிதாமென் மயிர்குருத்தெழு புருவமென்பது வெருவுபோர் வில்லிதாமென மொழிவரேயருள் விளைவிலார்சில வெறியரே. | (215) |
| | |
483. | புற்புதம்மென நீர்நிறைந்தழி பூளைநாறிய புண்களை அற்புதம்மென வயில்களென்பவர் அறிவிலார்சில ரவர்களே. | (216) |
477. சீவக. 1584.
481. ஊன் முடக்கு என்றது காதினை.
483. புற்புதம் - நீர்க்குமிழி. புண்களென்றது கண்களை.