471. | அருண்ஞான விறல்வாய வடல்வினையைச் செகுக்குநெறி அறிய வோதின் வருமாய வினைதுடைப்பா ருணர்வதனான் முன்னைவினை மாந்தி மாய்ப்பார். | (204) | | | | | 472. | அருந்தன்முதற் றொழிலொப்ப வகமொவ்வா ஞானவிற லவரை வேறா வருந்திமுதற் காண்பரிதான் மற்றவர்தம் மளவையெவர் வகுக்க வல்லார். | (205) | | | | 473. | மேலோடு கீழினுக்கு மேலோடு கீழாகி மேவு திக்கின் பாலோடு சூழினுக்குஞ் சூழாகுந் தானைநிலை பகர்வ தேயால். | (206) | | | வேறு | | 474. | அவ்வாறு நிறைந்தபெருஞ் சேனை நோக்கி அஞ்ஞனவன் றன்னைநீ ரழிக்கு நீதி எவ்வாறு கூறுகென வருள லோடும் எய்திநிரு பகன்சரண மிறைஞ்சிச் சொல்வான். | (207) | | | நிருபகன் கூற்று | | | | வேறு | | 475. | அழிந்தபுன் மலங்க ளாதி அருவருப் பவையே யன்றி ஒழிந்தவை யெவையோ கூற ஒள்ளிழை யார்க ளென்றே. | (208) | | | | | 476. | முன்பொடு பின்பெ லாமும் மூளையும் வழும்புந் தோலும் என்பொடு நரம்பு மாய இறைச்சிப்போ ரதுவே யன்றோ. | (209) |
471. வரும் மாயவினை - ஆகாமியம். முன்னைவினை - பிராரத்தம். மாந்தி - அனுபவித்து. 472. “எண்ணி லாதவியல் ஞான வீரர்தமை யெண்ண லாகுமள வெங்ஙனே, கண்ணில் வேறுபட வின்மை யானொருவர் காணு மாறரியர் காணுமே.” அஞ்ஞ. 473. “கீழி லாதபடி கீழு மேலுமதின் மேலி லந்தபடி கெழுமியே, சூழி லாதபடி சூழு தானைநிலை சொல்ல லாகுமள வல்லவே” அஞ்ஞ. 475. “தேராதா ரல்லரோ சேயிழையா ரெனத்திகைப்பார், ஆராயு மறி வுடையார்க் கருவருப்பே யல்லவோ.” அஞ்ஞ. |