| தானத போத னாதி மேவி வீறுவ தாழ்வுப டாத மோன வாகை சூடுவ தானச மாதி ஞான தீர மேபெறு தானையி ராசி கோடி கோடி கோடியே. | (200) | | | வேறு | | 468. | மலைய டங்கலும் பொடிபட விடிபட மகித லங்களுந் தொலைபட வுலைபட மகர பந்தியுஞ் சிதறிட வுதறிட வருண சிந்துவுங் கதறிட விதறிட நிலைய டங்கலுங் குலைபட வலைபட நெடிது கொண்டலுஞ் சொரிதர நெரிதர நெறிம யங்கிடும் பொழுதினு மொழிவறு நிலையி னின்றுதம் பரிசென மகிழ்வரே. | (201) | | | | | 469. | மலைய சந்தனம் புழுககி னறுவிரை மணநி றைந்தகுங் குமநறை பளிதமும் வகுள சண்பகங் கருமுகை யிவைகொடு வழிப டுந்திற மகிழ்வினு மகிழ்விலர் அலைகு லைந்திடும் படிமயிர் மயிர்தொறும் அரியி னுஞ்சுடுங் கனலிடை முழுகென அழலி லுந்தினும் பிறபிற புரியினும் அசைவ தொன்றினுஞ் செறிவில ரமைவரே. | (202) | | | வேறு | 470. | உரையிடையான் மறந்தொழிந்தே னுவகைகலுழ்ச் சியுமவருக் குளவா லூழின் வரையிதுநாங் கழித்தனமென் றின்புறுவர் துன்புறுவர் வருத்தி னோர்க்கே. | (203) |
468. மகரபந்தி - மகரமீன் வரிசை. வருணசிந்து - கடல். 469. புழுகு, அகில், நறுவிரை. பளிதம் - பச்சைக் கற்பூரம். வகுளம் - மகிழ். “சந்தன குங்குமங்கள் புழுககில் தண்பளி தஞ்சொரிந்து மகிழ்விலர், நொந்தன கொண்டரிந்து நுகரென நொந்திலர் முந்தையென்று நகுவரே.” அஞ்ஞ. 470. வருத்தினோர்க்கு - வருத்தினோர் பொருட்டு. “தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற், றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தா - லும்மை, யெரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று, பரிவதூஉஞ் சான்றோர் கடன்.” நாலடி. |