| ஞானவினோதன் அகலுதல் | |
463. | எங்கோமா னெம்பெருமா னெங்க ளீசன் இணையடித்தா மரைமுடிமே லினிது சூடித் தங்கோமான் றனைவிடைகொண் டகன்றா னன்னோன் தனித்தானை யெழுச்சியெவர் சாற்ற வல்லார். | (196) |
| | ஞானவினோதன் படைத்திறம் | |
| | வேறு | |
464. | தேசுப டாத யோக வாசி பூணுவ தீமைபொ றாது மாக மூடி யோடுவ சீர்தவ றாம லேக வீதி போவன சீலம்வி டாத மோன வீர ரூர்வன மாசுப டாத வேத கீத வோசைய மாலையு றாது வாச னாதி வீசுவ வாய்மையு லாவி ஞான தீர மேபெறு மாரத ராசி கோடி கோடி கோடியே. | (197) |
| | |
465. | தூய்மையு றாத வாதை சாகை சாடுவ சோதிய லாத மோக சாலம் வீசுவ தோடமி லாத வேக போக மேவுவ சோகமு றாத மோன வீர ரேறுவ வாய்மையு றாத மூக யூக மோதுவ மானமி லாத யோக வீதி போவன மாமத மாறி ஞான தீர மேபெறு வாரண ராசி கோடி கோடி கோடியே. | (198) |
| | | |
466. | வேரொடு மூல மாயை மாய வேறுவ வேறறும் யோக மான வீதி போவன மீளரு மூழி யூழி மீள மீள்வன வீரிய மோன சீல ரேறி யாடுவ பாரொடு கீழு மேலு மோடி நீடுவ பாவும னாதி கூடொ ணாது தாவுவ பாசவி ரோத ஞான தீர மேபெறு பாய்பரி ராசி கோடி கோடி கோடியே. | (199) |
| | | |
467. | ஊனமி லாத வேத நீதி போவன ஓகைநி டேதம் யாது மோவி லாதன ஊறுப டாத கேள்வி வாள்வி டாதன ஊசன்ம னாதி சாய வேக மாவன | |