457. | வன்பாசத் தளையறுத்து மயக்கந் தீர்ந்து மாமாயா புரமழிப்பார் வானோர்க் கெய்தா நின்பாத புண்டரிக நீங்கா ரன்றோ நீங்குவா ரெவருலகி னீங்க வல்லார். | (190) | | வேறு | | 458. | நன்மையில்லை தீமையில்லை சுசீலமு மில்லை நாடுவதொன் றிலைபுரியு நற்றவமு மில்லை மென்மையில்லை வன்மையில்லை விருப்புவெறுப் பில்லை மேலோய்நின் பதகமலம் விடாதவருக் கன்றோ. | (191) | | | | | 459. | குலமில்லை குணமில்லை குறியதுவு மில்லை கோலமில்லை கரணமில்லை குளிர்புனலு மில்லை நலமில்லை வழியில்லை யாச்சிரம மில்லை நற்கருணா லயநின்றா ணயந்தவருக் கன்றோ. | (192) | | | வேறு | 460. | பாலருட னுன்மத்தர் பசாச ரென்னப் பாடியுமா டியுமவைகள் பயிலா தேயும் சீலமுட னினிதிருந்துந் தனித்து மெங்கும் திரிபவர்நின் றிருவடிக்கீழ்ச் செறிந்தா ரன்றோ. | (193) | | | | | 461. | வார்பொருது பணைத்திறுமாந் தெழுந்து விம்மும் வன்முலையின் மூழ்கிடினு மயக்கந் தீர்வார் சீர்பெருகு சிவஞான தேசி காநின் திருவடியே யன்றியார் தீர்க்க வல்லார். (194) | (194) | | | சிவஞானதேசிகர் ஞானவினோதனைப் போர்புரிய விடுத்தல் | | 462. | இவ்வண்ணம் பலவியம்ப வினிது நோக்கி எந்தைபிரா னியன்ஞான வினோத னாரைச் செவ்வண்ண மஞ்ஞனவ னாவி யுண்டு திரும்புகென வருள்செய்தான் செய்த லோடும். | (195) |
457. “வருபாசக் கட்டறுத்து மாமாயா புரமழித்து மயக்கந் தீர்வார், சொருபானந் தாநினக்குத் தொழில்செய்வார் பிறராலும் தொலைக்கலாமோ.” அஞ்ஞ. 461. “கச்சொருவுங் கனதனத்தார் கலவியினும் புலவியினும் கலக்கந் தீர்வார், மெய்ச்சொருபா னந்தநினை மெய்ப்படத்தாம் பெற்றவரே வேறார் வல்லார்.” அஞ்ஞ. 457-61. இவை முன்னிலைப் பரவல். |