பக்கம் எண் :

68 பாசவதைப் பரணி

450.

அன்னவனும் வியந்துரைப்ப வஞ்ஞனெனுங் கொடும்பாச
      அரச னம்மா
முன்னவனு மொருவனுண்டோ வெனவிருந்தான் சேனையுந்தான்
      முழங்கி்ற் றேயால்.

(183)
 

ஞானவினோதன் கூற்று

 

வேறு

 

451.

எந்தை யெங்கோன் சிவஞான தேசிகன்
      இரும ருங்கினு மெங்கு மிருக்குநற்
சிந்தை யன்பாற் கனிவோரின் முன்புறச்
      செய்த மாதவன் சென்றெதி ரெய்தியே.

(184)
  

452.

போற்றி போற்றிமெய்ஞ் ஞான புரந்தர
      போற்றி போற்றியென் றேபுண்ட ரீகத்தை
மாற்றி யேற்றம் வழங்குசெஞ் சேவடி
      மௌலி தாழ்த்து வணங்கி வணங்கியே.

(185)
   

453.

கலையொ துக்கித்தன் வாய்புதைத் தெம்பெரும்
      கருணை நாயக கண்டருள் செய்கென
நிலையொ துக்கிவெம் பாசன் விளைத்தமை
      நின்று விண்ணப்பஞ் செய்தய னிற்பவே.

(186)
 

வேறு

 

454.

பழியுற்ற பாசமன்ன னவனால் வையம்
      படுந்துயரங் கேட்டருளிக் கருணை மாரி
பொழியுற்ற திருக்கடைக்கண் சாத்திப் பாத
      புண்டரிக மடியர்முடி பொலிய வைத்தே.

(187)
 

வேறு

 

455.

வேதனா ரணனறியாப் பாதஞ் சூட்ட
      மேதினிமே லெழுந்தருளும் விமல போத
நாதனார் திருக்கடைக்கண் பெற்றா ரன்றோ
      நானதுவா னேனென்னு நலத்தி னாரே.

(188)
   

456.

எம்பிரா னெங்கோமா னெங்க ளையன்
      எமையாளுஞ் சிவஞான குரவ னென்னும்
தம்பிரா னடிசூடப் பெற்றா ரன்றோ
      தற்சொரூ பானந்தந் தனைப்பெற் றாரே.

(189)

451. மாதவன் - ஞான வினோதன்.

455 - 6. இவை படர்க்கைப் பரவல்.