பக்கம் எண் :

8. கூளி கூறியது 67

445.

கொடுப்பதனைக் கொடாதவகை கோட்டிவிய வெனையெதிரிற்
      குபேர னேனும்
உடுப்பதுவு முண்பதுவு மின்றாகக் கிளையினொடும்
      ஒறுப்ப னேயால்.

(178)

 

  

446.

பண்போய குறளுருவாய்ப் படியிரக்கு மொருவனுக்குப்
      பழுதொன் றாற்றிக்
கண்போய வவனன்றிக் கண்ணுடைய நீருமென்போர்
      காணீர் போலும்.

(179)
   

447.

அறிவினோ டுருவாக்கம் யார்மாட்டுக் கண்டிடினும்
      அவைபொ றாது
செறிவினோ டறச்சீறிப் புழுங்குவதன் றோவெனது
      செய்கை யாதல்.

(180)
 

துன்மதி கூற்று

448.

அழுக்காற்றா னிவ்வண்ண மறைந்தமைய விவையனைத்தும்
      அறையக் கேளா
இழுக்காற்றா னிறைவனொடு துன்மதிமந் திரியிவ்வா
      றியம்பு வானால்.

(181)
   

449.

ஞானமே தன்மவித்த காமமெனு மொருநான்கும்
      நந்த நந்தும்
ஊனமே லொன்றுமிலா நம்படையி னூக்கமெவர்
      உரைக்க வல்லார்.

(182)

445. வியவு - ஏவுகின்ற ;  “கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்ப தூஉம், உண்பதூஉ மின்றிக் கெடும்.” குறள், 166.

பி - ம். ‘கொட்டிவிய. ’

446. குறளுரு - வாமனாவதாரம். கண்போய அவன் - சுக்கிராச் சாரியார்.

447. “அன்னியற் கறிவுரு வாக்கங் கண்டுகே, டுன்னியுட் பொறாமையா முருவி னேனுடன், தன்னிலுட் புழுங்குமத் தன்மை யேவடி, வென்னுமென் னசூயையை யாவர் வெல்வரே.” பிரபோத. காமனாதியர் வீரலாபச். 64.

449. வித்தம் - பொருள். “ஞான மாசில் தன்மவித்த காமநாம சாலையும், ஈனமாக்கு நம்படைக்கொ ரெல்லைசொல்வ தெங்ஙனே.” அஞ்ஞ.