| வேறு | | 439. | உங்களினு மெண்மடங்கு பதின்மடங்கு நாமுயர உயர்ந்தோ மென்னாத் தங்களிற்றா மிகல்புரியப் புரிவதன்றோ வெனதுபெருந் தலைமை யாதல். | (172) | | | | | 440. | நீயடா வெனக்கொப்பாய் நில்லடா நில்லென்று நிறுத்திப் பின்னர் வாயெடா வகைபுரிந்து மதர்ப்பதன்றோ வெனதரச வாகை யாதல். | (173) | | | | 441. | தானேநான் மறையோதுஞ் சதுமுகன்மா லவனெனக்குத் தரமோ வொப்பான் நானேநா னெனவுயரு நல்லாண்மை பெரிதுடையேன் நானே யாமால். | (174) | | | | | 442. | மாறாகத் துறக்கமொன்று மறுக்கமற வகுப்பனென மதித்துப் போந்து வேறாகப் படைத்தவனு மென்னேவல் பிழையாமல் விளைத்தோ னாமால். | (175) | | | மற்சரன் கூற்று | | | | வேறு | | 443. | நம்மத முற்று மிம்முறை யென்ன நாட்டி மதத்த னீட்டி யுரைப்ப விம்மித முற்றுத் தம்முறை முற்றும் விற்சர நேரு மற்சர னோதும். | (176) | | | வேறு | | 444. | இம்மையினும் விபவங்க ளெத்துணையுங் கெடுத்தென்னை எதிர்ந்தான் றன்னை அம்மையினு நிரயத்தி னழுத்திலனே லெனையழுக்கா றலனென் பீரால். | (177) |
442. படைத்தவன் - விசுவாமித்திர முனிவர். 444. விபவங்கள் - ஆக்கங்கள். எதிர்ந்தான் - ஏற்றுக்கொண்டவன். அம்மை - மறுமை. “அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்து விடும்” குறள். 168. |