430. | துக்கமீது சுகமெனச் சுத்தவெட்ட வெளியிலே எக்கியாரும் வீழநா னிந்த்ரசாலம் வல்லனே. | (163) |
| | |
431. | பழுதைசீறு மரவெனப் பதறியோடி யஞ்சிவீழ்ந் திழுதையாய் மருங்கொடிந் திடவியற்ற வல்லனே. | (164) |
| | | |
432. | மலத்தின்வீழ்ந்து சூகரம் வாய்மடுப்ப மற்றதும் நலத்ததாக வாக்குவே னானலாமல் யாவனே. | (165) |
| | |
433. | நரம்பெலும்பு தோல்வழும்பு நாறுமூளை பீளையாம் வரம்பிலூனை மாதராய் மயக்குவிக்க வல்லனே. | (166) |
| | அகங்காரன் கூற்று | |
434. | என்றுகூறி மோகனங் கிருத்தலு மெனக்கெதிர் ஒன்றுமில்லை யென்றகங் காரனின் றுரைப்பனால். | (167) |
| | வேறு | |
435. | வம்சமதிற் பெரியேன் வடிவதனிற் பெரியேன் வாழ்வுமிகப் பெரியேன் வாய்மைதனிற் பெரியேன் அம்சமதிற் பெரியே னாண்மைதனிற் பெரியேன் ஆரெனையொப் பவரெனா வமைபவன்யா னலனோ. | (168) |
| | | |
436. | சோதிமிகப் பெரியேன் றொல்புசழிற் பெரியேன் சுற்றமதிற் பெரியேன் கொற்றமதிற் பெரியேன் ஓதிமிகப் பெரியே னுண்மைதனிற் பெரியேன் ஒப்பவர்யா வரெனா வுயர்பவன்யா னலனோ. | (169) |
| | | |
437. | கேள்விதனிற் பெரியேன் கேதமதிற் சிறியேன் கேழ்மைதனிற் பெரியேன் கீழ்மைதனிற் சிறியேன் வேள்விதனிற் பெரியேன் வீணதனிற் சிறியேன் மிக்கவர்யா வரெனா விழைபவன்யா னலனோ. | (170) |
| | | |
438. | தானமதிற் பெரியே னூனமதிற் சிறியேன் தவமதனிற் பெரியே னவமதனிற் சிறியேன் மானமதிற் பெரியே னீனமதிற் சிறியேன் மற்றெவரொப் பவரெனா மலைபவன்யா னலனோ. | (171) |
433. பி - ம். ‘பூளையாம்’.
435. வம்சமதிற் பெரியேன் : “உங்களினெண் மடியான் வம்சமதிற் பெரியேன்” அஞ்ஞ.
436. ஓதி - ஞானம்
437. கேதம் - துயர்.