420. | நொய்தாய நீர்தனிலும் நுண்ணியது நெய்யதிலும் வெய்தாய புகையதிலு மெலிவர்நான் வெகுண்டக்கால். | (153) | | | | | 421. | ஈயீட்டு மதுவென்ன விருநிதிக ளெத்திசையும் போயீட்டு மதுவன்றிப் புசிக்கநான் பொருந்தேனால். | (154) | | | | 422. | சொல்லாத பொய்யுளதோ தொடர்ந்தனனே லுலகாளும் சல்லாபம் பெறவன்றோ தருமனும்பொய் சாற்றியதால்.. | (155) | | | | | 423. | கவிகையெடுத் தயலொருவன் கடும்பரிப்பின் கறங்குவராற் சிவிகையெடுத் தயலொருவன் சேவடியும் வருடுவரால் | (156) | | | மோகன் கூற்று. | | | | வேறு | | 424. | உலம்பியின்ன வண்ணமங்கு லோபனின் றுரைத்தலும் வலம்படுந் திறத்துமோகன் வாய்திறந்து கூறுவான். | (157) | | | | | 425. | ஈசனாம மில்லையாக வென்னையொப்ப யாவனே நேசனாகி யெங்குமாய் நிறைந்துநிற்க வல்லனே. | (158) | | | | | 426. | நாடநாட வென்னையோர்ந்து நல்லநல்லவென்று மேல் ஓடவோட வவதியின்றி யோடவல்லன் யாவனே. | (159) | | | | | 427. | நிலையில்வாழ்வு கானனீரி னீரதென்ன யாவர்தாம் உலைவிலாம லுள்ளகாறு முணரவல்ல ருரைமினே. | (160) | | | | | 428. | சத்தைமித்தை யாகவேறு தலைமயக்கி நிலையிலா மித்தைசத்தை யாகவே விளைப்பதேயென் விசயமால். | (161) | | | | | 429. | பெருவிருப்ப மன்றியே பிடித்துநா னலைப்புழி அருவருப்பு முண்டுபோலு மங்கியொத்த வர்க்குமே. | (162) |
420. “நீரினு நுண்ணிது நெய்யென்பர்” (நாலடி) என்ற செய்யுளைப் பின் பற்றி வந்தது. 421. “உடாஅது முண்ணாதும்” (நாலடியார்) என்ற செய்யுளைப்பின் பற்றி வந்தது. 422. “உரையாத பொய்யுண்டோ வுலோபனே யுற்றக்கால், தரை யாளும் பொருட்டன்றோ தருமனும்பொய் சாற்றினனே” அஞ்ஞ. 423. பரிப்பின் - குதிரைக்குப் பின்னே. 424. உலம்பி - முழங்கி. 425. “ஈசனொளி யோரிடத்து நிகழா வண்ண மெவ்வுருவுந் தன்னுருவா யெங்குந்தானாம், ஆசையவன்” அஞ்ஞ. பி - ம். ‘என்னை யொத்து’. 427. நீரின் நீரது - நீரினது தன்மையை உடையது. 429. அங்கி - நெருப்பு. ஒத்தவர் - தூய்மையை உடையவர் ; என்றது ஞானிகளை. |