பக்கம் எண் :

8. கூளி கூறியது 63

411.

கீர்த்திதனை யகற்றுவார் கிளர்பழிக்கு நாணுறார்
ஆர்த்திதனை யகற்றுவார் நானகலா தமைவேனேல்

(144)

 

  

412.

துறந்தார்க்கு மாதுலர்க்குந் தொடர்பின்றித் தன்பால்வந்
திறந்தார்க்குங் களைகண்ணா வெய்துவரோ யானெய்தின்.

(145)
   

413.

ஓதுதொழி னிலையவர்க்கு முயர்கான நிலையவர்க்கும்
ஏதுதொழி லெனமதிக்கு மிடர்களைய விசைவேனோ.

(146)
  

414.

தென்புலத்தா ரொடுதெய்வம் விருந்தொக்க றானென்ற
ஐம்புலத்தா றோம்புதலங் கடைவாரோ யானடையின்.

(147)
   

415.

பார்த்தனையிங் கிவர்க்கொக்கும் படைக்கென்று பகர்வதுமோர்
சாத்தனையிந் திரனென்று சாற்றலுமென் சமற்காரம்.

(148)
   

416.

மாலென்று முருகனென்றும் வறியவராம் பறவைக்கோர்
ஆலென்றும் புகழ்வதுமென் னாணையினா லாமன்றே.

(149)
   

417.

நவநிதிக்கு மிறையவனை நட்புற்றும் நானேவ
அவனிதிக்கு முடியவுழந் தரனுமைய மெடுத்தனனால்.

(150)
   

418.

வாமனனாய் மாவலிபால் மண்ணிரந்து மால்பின்னர்
வாமனனாய் முழுதெய்த வளர்ந்ததுமென் வலியாமால்.

(151)
   

419.

பொன்னுலகு புரந்தருளும் புரந்தரனு மங்கர்கோன்
தன்னுலகு புகுந்திரப்பப் பணித்ததுமென் சதுராமால்.

(152)

411. ஆர்த்தி - துன்பம். அகற்றுவார் - பெருகச் செய்வார்.

412. “துறந்தார்க்குந் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும், இல்வாழ்வானென்பான் துணை” குறள். 42.

414. “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங், கைம்புலத் றோம்ப றலை” குறள். 43.

415. பார்த்தனை - அருச்சுனனை ;  “மிடுக்கிலாதனை வீமனேவிறல் விசயனேவில்லுக் கிவனென்று....... கூறினுங்கொடுப் பாரிலை” தே. சுந்தர. சாத்தனை இந்திரனுக்கு ஒப்பாகச் சொல்லுதல் இறப்ப உயர்ந்த ஆனந்த வுவமையாகும் ;  யா. கா. ஒழிபு. சூ. 9, உரை. சமற்காரம் - சாதுரியம்.

417. இறையவன் - குபேரன். அவனிதிக்கு முடிய - அவனியிலுள்ள திசைகள் முழுவதும்.

418. வாம் மனனாய் முழுது எய்த - தாவுகின்ற மனத்தையுடைய வனாகி மூன்றடி முழுமையையும் அடைய.

417 - 8 “ஆலஞ்சேர் மிடற்றானு மையத்திற் குழந்திலனோ, மாலும் போய் மாவலிபான் மண்வேண்டி நின்றிலனோ” (அஞ்ஞ), “பலியீசனு மெடுத்தான், மாவலியை மூவடிமண் மாயனுமிரந்தான்” பிரபோத. காமனாதியர். 36.

419. அங்கர்கோன் - கன்னன். உலகு - தேயம்.