பக்கம் எண் :

62 பாசவதைப் பரணி

402.

எனையெதிர்ந்தான் கேடுநில மிலக்காக வெடு்த்தங்கை
தனையெறிந்தான் கரமுலகிற் றப்புகினுந் தப்பாதால்.

(135)
 

உலோபன் கூற்று

 

வேறு

 

403.

கோப னின்னதன் கொற்றம் புகலலும்
லோபன் வென்றி நுவலத் தொடங்குவான்.

(136)
  

404.

மலையோடி மிசையேற மலைவிப்பன் மற்றும்
அலையோடி வசையேற வலைவிப்பன் யானே.

(137)
   

405.

மிகுபார சுமைகொண்டு வேசரிக ளொப்ப
உகுபார வழிசெல்ல வுலைவிப்பன் யானே.

(138)
 

வேறு

 

406.

தாயுண்டோ தாதையுண்டோ தாரமுண்டோ தான்பயந்த
சேயுண்டோ தானுண்டோ வெனைச்சேருந் திருவிலிக்கே.

(139)
   

407.

உடையுண்டோ வயிறார வுண்டியுண்டோ கனவினுமோர்
கொடையுண்டோ குருவுண்டோ வெனையெதிருங் குணமிலிக்கே.

(140)
   

408.

பாரோடு விண்வரினும் பற்றுள்ள முற்றுள்ளார்க்
காரோடு முறவுண்டோ வருளுண்டோ வவர்தமக்கே.

(141)
   

409.

காடில்லை யரணில்லை கடலில்லை மலையில்லை
பீடில்லை நானுளனேற் பெருமிதமு மின்றேயால்.

(142)
   

410.

தாயினைவிற் றமைவர்கொண்ட தாரமும்விற் றமைவர்பெற்ற
சேயினைவிற் றமைவர்நான் சேர்ந்தமையு மமையத்தால்.

(143)

402. எதிர்ந்தான் - ஏற்றுக் கொண்டவன். “சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு, நிலத்தறைந்தான் கைபிழையா தற்று” குறள். 307.

404. “அடலோப னெழிலேவ ரமைவார்க ளடையக், கடலோடு மலையோடு தடுமாறல் காணே” (அஞ்ஞ. ) , “தங்குபுவி மாந்தரெவர் தாமுமுணர்வின்றிப், பொங்கிரவு நண்பகலொர் போதுமொழி யாதே, அங்கடவி நாடுமலை யாழ்கட லிவற்றோ, டெங்குமுலை கின்றதுமெ னிச்சையிய லன்றோ பிரபோத. காமனாதியா. 37.

405. பி - ம். ‘வேசரிக்கொப்ப’

408. “பேரோத நேரான பேராசை கூர்போ, தாரோடு முண்டோ வொரன்பென்ப தங்கே” அஞ்ஞ.