திரன் என்று உலகினர் சிறப்பித்துச் சொல்ல, வான் நெறிபாலிப்பவரே-வான நாட்டு நல்ல அரசு முறையைக் காப்பாற்றுபவரான அந்தத் திருமாலே (பாவளம் நாவளமாகத் தருவோர் என்க. ) எ-று. (வி - ம்.) மாய்தல் ஆதல் என்ற இரண்டு சொற்களின் முதனிலையுஞ் சேர்ந்து மாயாஎன்றாகிப் பின் மாயை என்றாயிற்று. மறைப்பது என்பது பொருள். மயங்குதலைச் செய்வது மாயை எனினுமாம். எங்ஙனமாயினும் தூய தமிழ்ச் சொல்லே என்று தெளிக. தான் ஒடுங்கிக்கிடந்த இடத்தைத் தன்பால் ஒடுக்கிய திறன் கூறிய நயங் காண்க. காசிபருக்கு மகனாகத் தோன்றி இந்திரனுக்குத் தம்பியாகி உபேந்திரன் என்ற பெயருடன் திருமால் உதவினர் என்க. ஒளி வடிவினராயிருந்து பின் பாற்கடலில் புறத்தார்க்குத் தோன்றப் பாம்பணையிற் கிடந்தனர் என்பது; அதன் பின்புதான் இராமனாகத் தோன்றியது.
வாமனனாகத் தோன்று முன்பே அவனது உலகினை அளக்குந் தாள் வலிமையினையும், இராமனாகத் தோன்றும் முன்பே அவன் தோள் வலிமையையும் துணிவொடு நம்பித் தெளிந்து முதல் முதல் கூறிய தேவர் என்க. ஆதி ஒளியாக என்றும், அரவணைக் கிடந்து காட்சி கொடுத்தும், அரச குலத்தில் தோன்றி அரசு துறந்து அலைந்தும், கோவலனாகி எளியனாகியும், மற்றும் பலபல செய்து அடியவர் மனத்தில் நிரம்பியவன்; இந்திரன் முதலியோருக்கு மேலோனாக இருந்தும் இந்திரனுக்குத் தம்பியாக வந்து உபேந்திரன் என்ற பெயருடன் அவன் புகழை விளக்கினான்; அத்தகைய அவனே என் பாடலுக்குந் துணைபுரிவான் என்க. கருடாழ்வார் தானத்தன தானத் தனதத் தானத்தன தானத் தனதத் தானத்தன தானத் தனதத் -தனதன தனத்தா 2. | தாரத்திரு பேரிற் கலவித் தாகத்தின ளாகத் தருமச் சாலைப்புவி காலைத் தடவத் -தலையணை கொடுத்தே |
|