பக்கம் எண் :

4முக்கூடற் பள்ளு

னாகியும் அரிய குணம் உடைமையால் வேதங்களால் சிறப்பிக்கப்படும் முதன்மையும் உடையவர், முக்கூடலர்-(மேற் கூறியன வெல்லாம் யாண்டோ எக்காலத்திலோ நடந்தவை) அவையேயன்றி; எமக்கு எளியராய் முக்கூடற் பதியில் எழுந்தருளியிருப்பவர், ஏடலர் வாசத்துளவோர்-நுண்ணிய இதழ் விரிந்த நறுமணம் உள்ள துளசிமாலையை அடையாள மாலையாக உடையவர், அணி அரவு அணைத் தூயவர்-மேற்கூறிய இயல்பே யன்றி ஆதி நிலைக்கும் அரச நிலைக்கும் இடையில் அழகிய பாம்பணையின் மேல் அறிதுயில் புரிந்த மாசற்றவர், மாயவர்-(மாயையாகிய பாம்பணையின்மேல் மயங்காமல் தூயராகித் துயிலுதலேயன்றி) அந்த மாயையைத் தன்கண் ஒடுக்கிக்கொள்ளும் மாயவரும் ஆயினவர், அடியவர் மனப்பூரணர்-(அவ்வாறு மாயையில் ஒடுங்கியவர் போன்று காணப்பட்டு மாயையைத் தன்பால் ஒடுக்கிக் கொண்ட மாயவராயிருந்தும்) அடியவரின் மனத்தின்கண் நிரம்பியிருந்து இன்பம் நிரம்பச் செய்பவர், காரணர்-இவ்வாறு அடியார் தம்மை வழிபட்டு இன்புறும் முயற்சிக்குந் தாமே காரணமானவர், அழகர்-இவ்வுலகமாகிய முக்கூடல் அழகரின், பள்ளிசைப் பாவளம்-பள்ளிசை நூலிற்கு உரிய பாடல் வளத்தை, நாவளமாகத் தருவோர்-என் நாவினது வளமாகத் தருபவர், (யாவரெனின்) துணிவொடு திருத்தாள்வலி தோள்வலி துணையென முதல் கூறிய தேறிய சுரர்-மிகுந்த நம்பிக்கையுடன் நின் திருவடியின் வலிமையும் தோள்களின் வலிமையுமே எங்களுக்குத் துணையாகுமென்று வாமனனாகவும் இராமனாகவும் தோன்றும் முன்பே கூறிய தெளிவடைந்த தேவர், பதி-(அந்தத் தேவர்களின்) நாட்டின், பகைக்கு ஈறு உள-பகைமைக்கு அழிவு உண்டாகும்படியான, வீறு உள-சிறந்த வலிமையுள்ள, சூரத்துடனே-கூர்த்த திறலுடனே, தானவர் வானவர் பணிவிடைசெய-அசுரரும் தேவரும் இட்ட வேலையைச் செய்ய, பழ மகபதி-பழைய இந்திரனுடைய, பேரியல் சீரியல்-பெருந்தன்மையினையும் புகழ்த்தன்மையினையும், பகர் இளமுறைக் கோன்என-உலகம் சிறப்பித்துக்கூறுதற்குக் காரணமான தம்பி முறையான உபேந்