திருமால்
தன தன தனத் தானன தானன-- தானத் தனனா. 1. | மணி மரகதச் சோதியர் ஆதியர் மனு மரபினிற் காவலர் கோவலர் மறை முதல்வர்முக் கூடலர் ஏடலர் --வாசத் துளவோர் அணி அரவணைத் தூயவர் மாயவர் அடி யர்வமனப் பூரணர் காரணர் அழ கர்பள்ளிசைப் பாவளம் நாவளம் --ஆகத் தருவோர் துணி வொடுதிருத் தாள்வலி தோள்வலி துணை யனமுதற் கூறிய தேறிய சுரர் பதிபகைக் கீறுள வீறுள --சூரத் துடனே பணி விடைசெயத் தானவர் வானவர் பழ மகபதிப் பேரியல் சீரியல் பக ரிளமுறைக் கோனென வானெறி --பாலிப் பவரே |
(இ - ள்.) மணி மரகதம் சோதியர் ஆதியர்-சிவந்த மாணிக்கமும் பசிய மரகதமும் கலந்த ஒளி வடிவினராகிய முதல்வர், மனு மரபினிற் காவலர்-(அவ்வாறு ஒளி வடிவினராகிய முதல்வராய் இருந்தும்) மன்னர் குலத்தில் வந்து தோன்றி அரசு துறந்து கால்சிவப்ப நடந்த காவலருமாயினவர், கோவலர்-(முதன்மையை மறந்து அரசருமாகி அரசு துறந்து அலைந்ததோடல்லாமல் மன்னர் குலத்திற் பிறந்து கோவலர் குலத்தில் வளர்ந்து காட்டில் மாடு மேய்த்து அடியார்க்கு எளியனாகிய) கண்ணனுமானவர், மறைமுதல்வர்-இவ்வாறு எளிய |