இவ்வாற்றான் அல்லாதானது தன்மை பெறப்பட்டது. இனி ஈவோனது புறத்தொழில் உரைக்கற்பாற்று. அது கோடல் பற்றியும் கொள்வோர் பற்றியும் இரு வகைப்படும். அவற்றுள் கோடல்பற்றிய புறத்தொழில் உரைக்கற்பாற்று. அத்தொழில், 1“இன்னாசெய் தார்க்க மினியவே செய்யாக்கா லென்ன பயத்ததோ சால்பு.’’ |
என்றார் ஆகலின் பருவமுடையராகி விரும்பின் பகைவராயினும் உடனளித்தலும், 2“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.’’ |
என்றார் ஆகலின் பேதைப் பருவம் உடையாட்குக் காமச் சுவை காட்டல் காமனுக்கும் ஒல்லாமையான், நட்டாராயினும் பருவம் எய்தளவும் தாழ்த்தலும், பருவமுடையார் விரும்பினராயினும், 3“நெடுநீர் மறவி மடிதுயி னான்குங் கெடுநீரார் காமக் கலன்.’’ |
என்றார் ஆகலின், அவர் அவற்றை உடையராய்க் கல்வி போற்றாராயின் அக்கல்வி பயன்படாமையால், பன்னாள் பழகினும் அவர்க்கு ஒன்றும் அளியாமல், 4“பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை யின்மை பழி.’’ |
என்றார் ஆகலின், பருவமுடையராகி அவ்வாறு முயல்வார்க்கே அவர் பன்னாள் பழக்கம் இலராயினும் எல்லாம் அளித்தலும் அவ்வாறு முயலினும், 5“வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை யுடையம்யா மென்னுஞ் செருக்கு.’’ |
என்றார் ஆகலின், அச்செருக்கு உளதேல் பயன் எய்தாமையின் அச் செருக்கால் பணியாதார் அண்மையின் இருப்பினும் அளியாமல், 6“உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்.’’ |
1. திருக்குறள் 987 3. திருக்குறள் 605 5. திருக்குறள் 844 2.திருக்குறள் 672 4.திருக்குறள் 618 6. திருக்குறள் 395 |