பக்கம் எண் :

108பாயிர விருத்தி

என்றார் ஆகலின், அவ்வாறு செருக்கும் மானமும் இன்றிப் பணிவுடையார் சேய்த்து உளராயினும் அளித்தலும் என நான்கு.

அவற்றுள் மலை, தன்னை உளி கொண்டு பேர்க்கும் பகைவராயினும் அவர் நீர்வேட்கையுற்று விரும்பின் உடனளித்தலும், அவ்வேட்கை இன்றித் தன்மருங்கு உறின் அவர்க்கும் அளிக்கும் குற்றமும் உடைத்து.

நிலன், தன் மருங்கு எய்தினும் வேட்கையுற்று உழாதார்க்கு அளியாமையின் அக்குற்றம் இன்மையும், போற்றுதலின்றிக் கள்வர் முதலாயினார் கொள்ள விடுப்பார்க்கும் அளிக்கும் குற்றமும் உடைத்து.

பூ, தவளை முதலாயின தன்னைப் பன்னாள் அடுத்திருப்பினும் அவை தேனைப் போற்றா என அளியாமல், ஒரு நாளே வரினும் தேனைப் போற்றி உண்ணும் தும்பிக்கே அளித்தலின் அக்குற்றம் இன்மையும், அத்தும்பி தன்னடி பணியாது தன்முடிமேல் அதன் கால் வைத்தல் அறிந்தும் அளித்தலின் செருக்குடையார்க்கு அளிக்கும் குற்றமும் உடைத்து.

துலாக்கோல், அண்மையராயினும் தன் அடியினைத் தீண்டார்க்கு அளியாமல், சேய்மையினின்று போந்தோராயினும் விலை அளித்துத் தன் அடியினைத் தொட்டு ஏற்றார்க்கு அளித்தலின் அக்குற்றம் இன்று.

இவ்வாற்றான் ஆசிரியனது தன்மை பெறப்பட்டது.

இனி உரைப்பாட்டு,

“பகைவ ராயினுந் தகைபெறு பருவந்
 திடனுறக் கொள்ளி னுடனவர்க் களித்தலும்
 நட்டா ராயினும் பெட்புறு பருவ
 முற்றில ராயின் வற்புறுத் தாமையுஞ்
 செயிரறப் பழகினு முயிரெனப் போற்றார்க்குச்
 சின்னப் பொருளு முன்னிக் கொடாம
 லொருநாள் வரினு மறவா தார்க்குப்
 பெரிய பொருளும் வரிசையி னளித்தலுந்
 தன்னடி பணியார் மன்னவ ராயினு
 மன்னவர்க் களியா தின்னன்மிக் குடைய
 வறிய ராயினு முறுபணி விரும்பி
 னெறியி னவர்தா முறவளித் தலுமென
 வாவகை நான்குந் தாவிலா சாற்குக்
 கோடல் பற்றிக் குறிக்கும் புறத்தொழில்.’’ (என்பது)