பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்109

அக்குடம், தன்னை நட்ட சிறார்க்கு அன்றி அவர்க்குப் பகையாயினார் விளையாடற் பருவம் உடையராகி விரும்பினும் கொடாமையானும் அவர்க்கு நட்பாயினார் தன் மருங்கு எய்தினும் விரும்பாவழிக் கொடாமையானும், மலையின் மறுதலைத் தன்மைத்து.

அப்பனை, கள் உண்ணும் வேட்கை இன்றி விலைப்பொருட்டுக் கொள்வார்க்கும் அளிக்கும் குற்றமும், பெற்றபின் இழத்தலின்றிப் போற்றுவார்க்கே அளிக்கும் குணமும் உடைமையின் நிலத்தின் மறுதலைத் தன்மைத்து.

அத்தெங்கு, மட்டையினைத் தம் அகத்துள் கொண்டு போற்றா தார்க்கும் அளிக்கும் குற்றமும், அதனைத் தன் அடிக்கீழ் எய்தினார்க்கும் தன் அடிதொட்டு ஏறினார்க்கும் அன்றிப் பிறர்க்கு அளியாக் குணமும் உடைமையின் பூவின் மறுதலைத் தன்மைத்து.

அப்பருத்தி, தனக்குள் இருக்கும் பொருளைத் தன் அடியாகிய காம்பினைத் தொட்டுப் பறித்தகாலை அளியாது, தன் தலை தகர்த்த பின்னரே கொடுத்தலின் துலாக்கோலின் மறுதலைத் தன்மைத்து.

இவ்வாற்றான் அல்லாதானது தன்மை பெறப்பட்டது.

இனிக் கொள்வோர் பற்றிய புறத்தொழில் உரைக்கற்பாற்று.

அத்தொழில், ஆசிரியன் மாணாக்கனிடத்துச் சென்று கற்பித்தால் அவன் விருப்பத்து அளவுகாண்டல் அரிது ஆகலின் அவனைத் தன்னிடத்து வருத்தலும் அவனை மயங்கச் செய்யாது கற்பித்தலும், அவன் அப்பொருளைத் தன்மருங்கிருந்து சிந்திக்கச் செயலும் அவனோடு அவ்வினையாளர் ஏனோரும் உடனிருந்து பயிலச் செயலுமென நான்கு.

அவற்றுள் மலை, கொள்வோரிடத்துச் செல்லாமல் அவரைத் தன்னிடத்து வருத்தலும், அவர் பன்முறை செல்லினும் நெறிமயங்கச் செயலும் உடைத்து.

நிலம் நெறி மயங்காது அளித்தலும், அளித்த பொருளை ஆங்கிருந்து உண்ணச் செய்யாது மனையின் உய்ப்பச் செயலும் உடைத்து.

பூ, தும்பிக்குத் தேன் அளிக்குமிடத்துத் தன் மருங்கிருந்து உண்ணச் செயலின் அக்குற்றம் இன்மையும், தேன் கொள்வனவாகிய பல தும்பியைத் தன் மருங்கு இருத்தாக் குற்றமும் உடைத்து.