பக்கம் எண் :

110பாயிர விருத்தி

துலாக்கோல், கொள்வோர் பலரைத் தன் மருங்கு இருத்தலின் அக்குற்றம் இன்று.

இவ்வாற்றான் ஆசிரியனது தன்மை பெறப்பட்டது.

இனி உரைப்பாட்டு,

“கொள்வோன் மருகிற் றான்செல் லாம
 லீவோ னவனைத் தன்மருங் குய்த்தலு
 மவன்மயங் காம லரும்பொரு ளளித்தலுங்
 கேட்டன நெஞ்ச நாட்டி யுசாவத்
 தன்பா லவனை யன்பால் வைத்தலு
 மவனுட னவ்வினை யாளர் பிறரும்
 பயில்வகை யாங்கே செயலு மென்ன
 வாவகை நான்குந் தாவிலா சாற்குக்
 கொள்வோர்ப் பற்றிக் குறிக்கும் புறத்தொழில்.’’ (என்பது).

அக்குடம், கொள்வோரிடத்துத் தான் செல்லும் குற்றமும், நெறி மயங்கச் செய்யாது அளித்தலும் உடைத்து. அப்பனை அறிவு மயங்குமாறு அளித்தலும், அளித்த கள்ளினைத் தன் மருங்கிருந்தும் உண்ணச் செயலும் உடைத்து. அத்தெங்கு, தான் அளித்த மட்டையினை ஆங்கிருந்தே பயன்படுத்தற்கு ஏலாமையும், பலரைத் தன் மருங்கு இருத்தலும் உடைத்து. அப்பருத்தி, பலரைத் தன் மருங்கு ஏலாமை உடைத்து.

இவ்வாற்றான் அல்லாதானது தன்மை பெறப்பட்டது.

இனி ஈவோனது உரைத்தொழில் உரைக்கற் பாற்று.

அத்தொழில் நூலது நூண்பொருளைக் கொள்வோன் பின்னர் இனிது உணருமாறு கருதி ஈவோன், பாயிரம் முதலாயவற்றின் தன்மையைப் பருப்பொருட்டாக முன்னர்க் கூறுதல் பற்றி, பொதுப்பாயிரத் தன்மை உரைத்தலும், சிறப்புப்பாயிரத் தன்மை உரைத்தலும், நூல்வகை உரைத்தலும் நூலது உறுப்பின்வகை உரைத்தலும், சூத்திரத்தின் கிடக்கைவகை உரைத்தலும், சூத்திரத்தின் பயன்வகை உரைத்தலும் என அறுவகைப்படும்.

அவற்றுள் பொதுப்பாயிரவகை உரைத்தல் உரைக்கற்பாற்று.

அவ்வகை ஈவோன் தன்மை முதலாக முன்னர்க் கூறிய நான்கு.

அவற்றுள் மலை, பொருள் கொள்வார் தன் மருங்கு அடைதற்கு முன்னரே பல்வகைப் பொருளும் பாற்பட நிரம்பிய பான்மை