உளராயினும் அம்மதக் கொள்கையுள் யாதொன்றும் இன்றி 1நான்மறை முற்றிய வாசான் என்றும் 2அளபிற் கோட லந்தணர் மறைத்தே என்றும் 3ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்றும், 4“நூலே கரக முக்கோன் மணையே யாயுங் காலை யந்தணர்க் குரிய.’’ |
என்றும்5மாயோன் சேயோன் வேந்தன் வருணனென்றும், அகத்தியத்தின் வழிவந்த இந்நூல் வேதத்தையும் வேதநெறியொழுகும் அந்தணரையும் வேதத்துள் கூறிய தேவரையும் குறித்துக் கூறுதலானும், புத்தமதக் கொள்கை கூறாவிடினும் அக்குருவின் வழிவந்த நூலாயின் அந்தணர் மரபு கூறியாங்குப் பௌத்தர் மரபாயினும் கூறல் வேண்டும் ஆகலானும், கடைச்சங்கப் புலவருள் தலைவராகிய நக்கீரனார், 6முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி எனக் கூறுதலான், அவர் அவலோகிதனிடத்துக் கேட்பின் முதற் புத்தேள் எனல் பொருந்தாமையானும், புத்த மதத்தாருள் நல்லிசைப் புலவருமாகிய கூலவாணிகன் சாத்தனார் 7அமர முனிவனெனவுஞ், சைனமுனிவரும் நல்லிசைப் புலவருமாகிய இளங்கோவடிகள் 8தெய்வமால்வரைத் திருமுனி எனவும், பிற சான்றோரும் 9திருந்திய பொதியி லருந்திற லகத்தியன் எனவும் 10வயந்த மாமலை நயந்த முனிவரன் எனவும் கூறினார் அன்றி, அங்ஙனம் கூறாமையானும் என்பது. இனி இந்நூல் மூன்று உறுப்படக்கிய பிண்டம் என்றாற்போல்வவும், ஒவ்வோர் உறுப்பும் ஒன்பது ஒன்பது ஓத்துடைய என்றாற் போல்வவும், அகத்தியம் அவிநயம் முதலாயின இயலிசை நாடகம் என்னும் மூன்று பிண்டத்தை உடைய வேறொரு பிண்டம் என்றாற்
1சிறப்புப் பாயிரம். 2பிறப்பியல் 20 3கற்பியல் 4 4மரபியல் 70 5அகத்திணையியல் 5 6தொல், செய்யுளியல், பேராசிரியர் உரை மேற்கோள். 7மணிமேகலை. 8அரங்கேற்றுக்காதை 1 வது அடி. 9அரங்கேற்றுக் காதை உரை மேற்கோள். 10சிலப்பதிகார உரை மேற்கோள். |