முளைத்தல் இன்மையால் தான் பொருளுடைத்து ஆகாமையானும் அலராமையானும் ஈகையினையும் நகையினையும் இயல்பினின்று. பெய்தபின் ஈகையும் தகர்த்தபின் மலர்தலும் செயற்கை ஆதலின் ஈண்டைக்கு ஏலா, அக்குடம் அக்குற்றத்தோாடு வன்சொலின்மையும் இகழாமையும் எனக் குணம் இரண்டு உடைத்து. இனிமடற்பனை, 1“கற்றறிந்த நாவினார் சொல்லார்தஞ் சோர்வஞ்சி மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல் வற்றிய வோலை கலகலக்கு மெஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லை யொலி.’’ |
என்றார் ஆகலின், அவ்வாறு வற்றிய ஓலையான் வன்குரலும் இகழலும் காட்டலின் அக்குணமின்று, தன்மாட்டுத் தொடர்புடைய சாலியர் பசியான் வருந்தின் கள் அளித்தலின் அன்பும் அச்சான்றார் தன் முகத்தெதிர்வரின் அவரடியினைத் தன் தலையால் தாங்கி வளைதலின் பணிவும் எனக் குணம் இரண்டு உடைத்து. ஈண்டுச் சாலி என்றது கள்ளினை. சாலியர் கள் விளைப்போர் சான்றார் என்றது அத்தொழிலுடைச் சாதியாரை. இனி முடத்தெங்கு, பாளை ஈனாமையின் பசிக்கு உணவு அளி யாமையானும், உணவு இன்மையான் விருந்தினர் தன்முகத்தெதிர் வாரார் ஆதலின் அவரடியினைத் தாங்கிப் பணியாமையானும் அக்குணமின்று. அகத்துள் ஒருபொருளும் இன்மையானும் புறத்துப் பொருள் உடையதுபோல முகமலர்ச்சி செய்து காட்டாமையானும் அகமும் புறமும் தம்முள் மாறாகாமையால் செம்மையும், கூம்பிச் செல்லும் இயல்பிற்று ஆதலின் 2தாளுண்ட நீரைத் தலையாலே தான் றருதற் கியலாமைபற்றி வரு நாணமும் எனக் குணம் இரண்டு உடைத்து. இனிக் குண்டிகைப் பருத்தி, அகத்துள்ளது தின்னற்கு உரித்தாகாத பஞ்சே எனினும், தின்னற்கு உரிய பொருளுடைத்து எனத் தோன்றுமாறு புறத்தே பசியநிறம் கோடலின் அகமும் புறமும் தம்முள்
1நாலடி- 266 2“தளராவளர்தெங்கு தாளுண்டநீரைத் தலையாலே தான்றருதலால்’’ என்பது மூதுரை. |