பக்கம் எண் :

36பாயிர விருத்தி

மாறாகலானும், தான் குண்டிகையுள் புகாக்காலை அம் மாறுபாடு கருதி நாணாது நிமிர்ந்து நின்று, குண்டிகையுள் பெய்து வைத்து நீர் வார்த்து உபசரித்தகாலைச் சிறார்க்கு நன்றிசெய்யாமல்,

1“முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை
  நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு.’’

என்றார் ஆகலின், அத்தன்மையராய குலமகளிர் நாணுப் போலப் புலனாகாதது ஓர் பொருள் உடைத்து எனக் காணப்படலானும் அக்குணம் இன்று.

இனி ஆசிரியன் அல்லாதான் இருவகை மரபும் குற்றம் உடமையான் அவ்எட்டனையும் இயல்பின் இலன்.

இனி மலை, உயர்பிறப்பிற்று ஆயினும் ஆசிரியற்கு ஆகாக் குற்றம் சில உடைமையானும் குடிமை எட்டனையும் உணர்த்தாமல் எஞ்ச உணர்த்தலானும் அக்குற்றத்தை விலக்கி, அம்மலையான் உணரப்படாத ஏனைக் குணத்தினை உணரற்பொருட்டு, அம் மலையின் பின்நிலனும் அந்நிலனும் அத்தன்மைத்து ஆதலின் அதன் பின்னர்ப் பூவும் அப்பூவும் அத்தன்மைத்தாதலின் அதன்பின்னர்த் துலாக்கோலும் உவமம் கூறி, அந்நான்கானும் அக்குடி இயல்பு எஞ்சாமல் உணரப்படலின், அவற்றின் பின்னர்ப் பிறிதொன்று கூறாமலும் விடுத்தார்.

இனிக் கழற்பெய்குடம், ஆசிரியன் அல்லாதானுக்கு இயற்கையின் இல்லாத குணம் சில உடைமையானும் அவனது தன்மையுள் எல்லாம் உணர்த்தாமல் எஞ்ச உணர்த்தலானும், அதன்பொருட்டு மடற்பனையும் அதுவும் அத்தன்மைத்தாதலின் முடத்தெங்கும் அதுவும் அத்தன்மைத்தாதலின் குண்டிகைப்பருத்தியும் முறையால் கூறி, அந்நான்கானும் அவன் இயல்பு எஞ்சாமல் உணரப்படலின், பிறிதொன்று கூறாமலும் விடுத்தார்.

இவ்வாற்றானே தன்நின்றவழிப் பொருளது தன்மையை முற்ற உணர்த்தாமையின், மலை முதலாய அந்நான்கும் ஒருங்கு நின்று ஆசிரியனுக்குப் பிண்ட உவமம் ஆகும் என்பதூஉம், அவை பிண்டமாயவாற்றான் மலையின் குற்றத்தை நிலனும் நிலத்தின்


1திருக்குறள் 1274.