குற்றத்தைப் பூவும் பூவின் குற்றத்தைத் துலாக்கோலும் களைதலின் அந்நான்கனது குணங்கள் ஒருங்கு எண்ணப்படலான் அவை ஆசிரியன் இயல்பாயின என்பதூஉம், அவ்வாறே கழற்குடம் முதலாயின ஆசிரியன் அல்லாதானுக்குப் பிண்ட உவமமாகும் என்பதூஉம், அவ்வாற்றால் குடத்தின் குணத்தைப் பனையும் பனையின் குணத்தைத் தெங்கும் தெங்கின் குணத்தைப் பருத்தியும் களைதலின், அந்நான்கனது குற்றமும் ஒருங்கு எண்ணப்படலான் அவை ஆசிரியன் அல்லாதான் இயல்பாயின என்பதூஉம், கழற்குடம் மலை இயல்பின் மறுதலையும் மடற்பனை நிலத்தின் மறுதலையும் முடத்தெங்கு பூவின் மறுதலையும் குண்டிகைப் பருத்தி துலாக்கோலின் மறுதலையும் ஆகும் என்பதூஉம், இவ்வாறு உடன் பாட்டானும் எதிர்மறையானும் ஆசிரியனது குணமும் அல்லாதானது குற்றமும் உணரப்படலின், ஆசிரியன் அல்லாதான், ஆசிரியனது தன்மையின் மறுதலைத்தன்மை உடையான் என்பதூஉம் பெறப்பட்டன. இனி உரைப்பனவும் அன்ன. இனி இவ்உவமத்தான் இல்நிலை, துறவு நிலை என்னும் இரண்டனுள் ஒன்றுபற்றி நிற்கும் நால்வகை வருணத்துள்ளும், ஆசிரியனும் அல்லாதானுமாகிய அவ்இருவகையாரது பொது இயல்பும் இன்மையும் உணரப்படும். இனி அவை இயற்கையாமாறு என்னையோ எனின், அவ் எட்டும் இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாகுதலானும், 1“அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார் குன்றுவ செய்த லிலர்.’’ |
எனவும், 2“வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று.’’ |
எனவும்,
1திருக்குறள்- 954 2திருக்குறள்- 955 |