1“சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார்.’’ |
எனவும் கூறினாராகலின், பெருக்கம்பற்றியும், வறுமை பற்றியும் சலம்பற்றியும் அவர் அவ்வியல்பின் வேறுபடார் என்பது பெறப்படலானும் பிறர்க்காயின் கற்பித்தவழியும் அவை நெடிது நில்லாமையானும் அஃது அறியப்படும் என்பது. இனி, 2“ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் மூன்று மிழுக்கார் குடிப்பிறந் தார்.’’ |
என்றார் ஆகலின் அவற்றுள் ஒழுக்கமும் வாய்மையும் என அவ்விரண்டனையும் அவ்எட்டனொடு கூட்டி உரையாது, வேறு கூறினமையும் நாணினை அவ்வாறு கூறாமையும் என்னை எனின், அவையும் இயற்கையாயினும் ஒழுக்கமும் வாய்மையும் நந்நான்கு வகைய ஆதலானும், ஏனைய நாணம் முதலாய எட்டும் பல்வகைய ஆகாமையானும் அவ்எட்டனையும் குடிமை என ஓர் உறுப்பாக்கியும் ஒழுக்கத்தினையும் வாய்மையினையும் இருவேறு உறுப்பாக்கியும் கூறினார் என்பது. இனிச் செப்பமும் நாணும் என முன்னர்க் கூறப்பட்டவற்றுள் நாணினை ஒழுக்கமும் வாய்மையும் நாணும் எனப் பின்னும் கூறியது என்னையோ எனின், இக்கடா அந்நூல் உரைக்குமிடத்து வேண்டும் ஆதலின் இன்னோரன்ன ஈண்டைக்கு ஏலா என்பது. இனி, 3“ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய் விடும்.’’ |
எனவும்4‘குலத்தளவே யாகுங் குணம்’ எனவும் சான்றோர் கூறினார் ஆகலின் ஒழுக்கத்தின் இழுக்காதுநிற்பின் வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் வருணத்தானாயினும் அவ்வருணத்துள்
1திருக்குறள்- 956 2திருக்குறள்- 952 3திருக்குறள்- 133 4மூதுரை- 7. |