உழும் காட்சியாடு ஒக்கும் ஆதலின் உழவு உடைத்து, பசித்தார் யாவராயினும் ஊண் அளித்தல் அறமாம் என ஐந்து அவித்தான் விதித்தலின் தேனீதல் அறமாயினும் கள் குடியுடைய தும்பிக்கு மகரந்தமாய பொருள் அளித்தல் அறம் ஆகாமையின் தக்காரை அறிந்து ஈதலை இன்று. அக்கோல், 1“தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.’’ |
எனவும், 2“ஈட்டிய வெல்லா மிதன்பொருட் டென்பதே காட்டிய கைவண்மை காட்டினார்- வேட்டொறுஉங் காமருந்தார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர் தாமரையுஞ் சங்கும்போற் றந்து.’’ |
எனவும் கூறினார் ஆகலின், அவ்வண்ணமே விலைகொடுக்கும் தக்கார்க்கு அவர் வேண்டுவன குறையாது கொடுத்தல் உடைத்து. சங்கநிதியும் பதுமநிதியும் பின்னும் அளத்தற்குரிய தன்னல் தலையளியாமல் நிதியம் எல்லாம் அளிக்கும். வணிகர் முதற் பொருளை அளியாமல் ஊதியம் எல்லாம் ஒருங்கே ஈதல் உடையார். இனி அக்குடம், ஓதலும் வேட்டலும் இன்மையானும், ஏனைக் குடம்போலக் கற்றாவின் பால் கறத்தற்கும் ஏற்றற்கும் பயன்படாமல் கிடத்தல் கன்று சாவப் பால் கறவார் என்ற மேலையோரது நன்மொழி கடைப்பிடித்துக் கன்றினைப் பாதுகாக்கும் கருத்தொடு நிரை ஓம்பல் குணத்தைக் காட்டலானும் முதல் இவை என்றும் விளையாட்டின் ஊதியத்தால் கிடைத்தன இவை என்றும் சிறார் கழல் கணித்துப் பெய்தலின் வாணிகம் உடைமையானும், மலையின் மறுதலைத் தன்மைத்து. அப்பனை 3ஆவுரித்துத் தின்றுழலும் புலையரைக் கள்ளூட்டிக் காத்தலின் நிரை ஓம்பல் இன்று. ஏனைப் பனைபோல ஒன்று பல
1திருக்குறள் 212 2தொல் பொருளதிகாரம் 164 வது பக்கம் 19 வது வரி 3திருநாவுக்கரசு நாயனார் தேவாரம். ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனு மவர்கண்டீர் யாம்வணங்குங் கடவுளரே |