பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்47

அப்பருத்தி தன்னைப் பஞ்சு அளியாவண்ணம் நீருள் பெய்து தடைச்செய்த கொடியாராய சிறாரை ஒறுத்தல் இன்மையின் தண்டம் இன்று.

இவ்வாற்றான் அரசருள் அவ்விருவகையாரது தன்மை உணரப்படும்.

இனி வணிகர் இயல்பு என்னை எனின் ஓதலும் வேட்டலும் நிரைஓம்பலும் வாணிகமும் உழவும் ஈதலும் என 1இருமூன்று மரபினவாய பக்கம் என்பது.

இனி வணிகர்க்கு வாணிகமே சிறப்புடைத்தாதலானும் வாணிகம் குறித்துத் திரைகடல்மேலும் பிற தேய்த்தும் செல்லுழி, வேதம் ஓதல் நியமம் ஆகாமையானும், பொருள் முட்டுப்பாடு இன்றித் தம் நாட்டிருக்குங்காலை ஓதினும் அமையும் ஆதலானும் மலையின் கண் காற்றுளபோழ்து ஒலிக்கும் மருமராஞ்சம் அவ்வணிகர் ஓதற்கு உவமமாயிற்று. சோமலதை முதலாயின கொண்டு மலையினை அவர் வேள்விக்கு உவம மாக்கப்படும். அம்மலை நிரையழிக்கும் புலி முதலாயவற்றை உடைமையின் நிரை ஓம்பல் இன்று. தன் வளத்துக்குக் காரணமாகிய வித்து இத்துணைத்து என்றும் வளன் இத்துணைத்து என்றும் அறியலாகாமையின் வாணிகம் இன்று.

நிலன் தன்கண் உள்ள நெல்லின் கழையானும் புல்லானும் நிரை ஓம்பல் உடைத்து, வித்தாகிய முதல் இத்துணைத்து என்று அறியப்படலானும் அதனை ஒன்று பலவாக்கி, விளைத்த ஊதியமாகிய வளனும் இத்துணைத்து என்று அறியப்படலானும் வாணிகமுடைத்து, தன்னை உழுதலன்றித் தான் உழாமையின் உழவின்று.

பூ, தன்மேல் தும்பியும் அதன் பெடையும் ஒருங்கு உற்றகாலைக் காற்று அசைப்பின் தான் அசைந்தசைந்து, கையாகிய இதழை அக்கரிய தும்பிக்கும் பெடைக்கும் இடையே நீட்டி ஓட்டும் காட்சி 2மாமனு மருமகனும் போலு மன்பின காமனுஞ் சாமனும் போலுங் காட்சிய வாய கரிய நெறிமருப் பெருமையி னொருத்த லேரினை உழவர் கைப்பற்றி


1தொல்காப்பியம் பொருளதிகாரம், 75.

2சீவகசிந்தாமணி நாமகளிலம்பகம் 14.

3சீவகசிந்தாமணி நாமகளிலம்பகம் 15.