பக்கம் எண் :

74பாயிர விருத்தி

அப்பனை, தன் மருங்கு ஏறினாரை உடலைப் பீறலின் வெகுளி உடைத்து, தன் இயற்பொருளாகிய ஓலையும் பாளையும் பிறவும் நூல் வரைதல் முதலாய நற்செய்திக்கு உதவலின், பொருள் அல்லவற்றைப் பொருள் என்று கோடலின்று.

அத்தெங்கு, காயினை அளிக்கும் பாளை ஈனாது, மற்றைப் பொருள் அல்லவற்றைக் கோடலின் மருளுடைத்து, வித்து ஈன்று பின்னும் முளையாமையின் நோய் இன்று.

அப்பருத்தி, தனக்குள் வித்து உடைமையால் பின்னும் முளைக்கும் ஆதலின் நோயுடைத்து.

இவ்வாற்றான், ஞானத்து இயல்பும் இன்மையும் உணரப்படும்.

இனி எண்வகை உறுப்புள் ஏனைய உறுப்பிற்குக் குடிப்பிறப்பே காரணம் ஆகலின், அது முன்னும் ஏனைய பின்னும் அக்குடிப் பிறப்புவகை எட்டனுள் இல்நிலை, துறவுநிலை இரண்டற்கும் காரணமாயது பொதுவியல்பு ஆகலின் அது முன்னும் ஏனைய பின்னும், துறவுநிலை வகைக்கு இன்னிலை (இல் நிலை) வகையே காரணம் ஆகலின் அவ்வகை முன்னும் ஏனைய பின்னும், இல்நிலை வகை நான்கனுள் அந்தணராய உயர்ந்தோர் கற்பித்தவழியின் ஏனைய மூவகை வருணத்தாரும் நடத்தல் வேண்டும் ஆகலின் அந்தணர் இயல்பு முன்னும் ஏனைய பின்னும், அரசன் காவலான் அன்றி ஏனையோரது தொழில் நிலைபெறாமையின் அரசர் இயல்பு முன்னும் ஏனைய பின்னும் அரசு காவலொடு வாணிகமும் உழவும் நடை பெறற்கு ஓர் காரணம் ஆகலின் வணிகர் இயல்பு முன்னும் ஏனையது பின்னும், துறவுநிலை மூன்றனுள் யோகத்திற்கும் ஞானத்திற்கும் தவம் காரணமாகலின் தவத்தியல்பு முன்னும் ஏனைய பின்னும் அத்தவத்தியல்பு நால்வகை இல்நிலையுள் யாதானும் ஒன்றன் காரணத்தால் நிகழுமாயினும் உயிர்கொடைத் துணிவும் கைவந்தபின்னன்றித் துறப்பின்.

1“மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
 லுற்றார்க் குடம்பு மிகை.’’

என்றார் ஆகலின் உடம்பினைப் பேணும் அவா நீங்காது, ஆகலின் தவம் முற்றாமையின், உயிர்க்கொடைக்கு உரியாராய வேளாளர்


1திருக்குறள் 345