பக்கம் எண் :

90பாயிர விருத்தி

நிலன், மேல் நின்றார்க்கும் கீழ் நின்றார்க்கும் ஒப்ப அளித்தலின் அப்பகுதியில் சமனிலை உடைத்து. தன் சுற்றமாகிய உழவர்க்கு அளித்து உழாதாராகிய சுற்றம் அல்லாதார்க்கு அளியாமையின் அப்பகுதியின் உளதாகும் நடுவுநிலைமை இன்று.

பூ, தன் சுற்றம் ஆகாமல் சேணிடைநின்று எய்திய தும்பிக்கு அளித்தல் உடைத்து. இசை கற்ற தும்பிக்கு அன்றி இசை கல்லாத தவளை முதலாய பிறவற்றுக்கு அளித்தல் இன்று.

துலாக்கோல், கற்றார் கல்லாதார் என்னும் பகுதி நோக்காது ஒப்ப அளித்தல் உடைத்து.

ஆசிரியன் அழுக்காறு இன்மையும் அவா இன்மையும் உடையனாதலின், பெருக்கத்துக்குக் காரணம் அழுக்காறு இன்மையும் கேட்டிற்குக் காரணம் அவாவும் ஆதலன்றி, நண்பும் பகையும் முதலாய பகுதிகள் காரணமாக என உணர்தல் இயல்பாதலானும்,

1“கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
 கோடாமை சான்றோர்க் கணி.’’

என்றார் ஆகலின், அவை காரணமாக நெஞ்சம் கோடாமையானும், கோல் கோடுதற்குக் காரணம் தூக்கிய பொருளது மிகையும் குறையும் ஆதலன்றி, நண்பு முதலாய பகுதி காரணமாகாது எனக்கொண்டு அம்மிகை குறை நீக்கிச் சமன்செய்து சீர்தூக்கி நண்பு முதலாய அப்பகுதிபற்றிக் கோடாத துலை நாவன்ன சமனிலை உடையன்.

அக்குடம், கழல்பெய்த சிறாரை நட்ட ஏனைச் சிறார்க்கு அளித்தலும் பகைத்த சிறார்க்கு அளியாமையும் உடைமையின் பகை நண்பின் ஒப்ப நிற்கும் நடுவுநிலைமை இன்று. மேல் நின்றார்க்கும் கீழ் நின்றார்க்கும் ஒப்ப அளித்தலின் அந்நடுவுநிலைமை உடைத்து.

அப்பனை, மேல் ஏறினார்க்கு அன்றிக் கீழ் நின்றார்க்குக் கள் அளியாமையின் அந்நிலைமை இன்று. தன்னை வளர்த்த சுற்றம் அல்லாதார்க்கும் கள் அளித்தலின் அந்நிலைமை உடைத்து.

அத்தெங்கு, நீர் வார்த்துப் பேணும் சுற்றத்துக்கே அன்றிப் பிறர்க்கு ஓலை முதலாயின அளியாமையின் அந்நிலைமை இன்று.


1திருக்குறள் 115