அல்லாதான் அழுக்காறு உடையன் ஆதலின், மனம் அவன் வயப்படாமல் அவனைத் தன்வயமாக்கலின் புலம் வென்றோன் ஆகாமையானும், அவன் தான் உரைப்பன பயனில ஆயினும், பொருள் பெறின் நன்றி உரையாமையானும், யாவதும் வெஃகும் உள்ளம் உடையான். இனி,1ஒருவன் றன்னெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பினை யொழுக்காறாக் கொள்ளின் அது காரணமாக அவற்குப் பொருள் முதலாய நால்வகையுள் யாதாயினும் வெஃகல் குற்றம் எனத் தோன்றும் ஆதலின், அழுக்காறு இலாமையின்பின் வெஃகா உள்ளம் கூறப்பட்டது. இனி நடுவுநிலைமையின் வகை என்னை எனின், நண்பும் நண்பு அன்மையும் என்னும் பகுதியும், மேலும் மேல்அன்மையும் என்னும் பகுதியும், சுற்றமும் சுற்றம் அன்மையும் என்னும் பகுதியும், கல்வியும் கல்லாமையும் என்னும் பகுதியும் என, அந்நான்கு வகையினும் வழுவாமல் ஒப்ப நிற்றலான் நால்வகைப்படும் என்பது. அவற்றுள் மலை, அழுக்காறு இன்மையும் வெஃகாமையும் உடைமையானும், செல்வப் பெருக்கத்துக்கு அழுக்காறு இன்மையும் அச்செல்வம் அஃகுதற்கு வெஃகுதலும் காரணமாதலன்றி, நண்பும் பகையும் முதலாய பகுதிகள் காரணம் ஆகாமையானும், வெறியாட்டு அயர்ந்து தன்னைப் பேணும் நட்டாராயினும் உளிகொண்டு தன்னைத் தகர்க்கும் பகைவராயினும் பசி நீர்வேட்கை உறின் அத்துன்பினை அவ்இருபகுதியினும் ஒப்ப நீக்கலானும், 2“தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட டொழுகப் பெறின்.’’ |
என்றார் ஆகலின், அப்பகுதிதோறும் தன் முறைமையை விடாது ஒழுகும் நடுவுநிலைமை யுடைத்து. பகை நண்பு கருதாதாயினும் மேல் கீழ் எனும் பகுதி கருதல் உடைத்து. என்னை, கீழ் நின்றார்க்கு அன்றிச் சிகரத்தின் மேல் நின்றார்க்கும் விடாய் உறினும் அருவி நீர் அளியாமையின் என்பது.
1திருக்குறள் 161. 2திருக்குறள் 111. |