முதலாயவற்றைத் தானும் வெஃகலின் பிறன் உரிமை வெஃகல் உடைத்து. நிலம், பிறன் உரிமை வெஃகாது, பிறன் செய்யும் பணி வெஃகல் உடைத்து. பூ, தும்பியின் பணி வெஃகாமல் அதன் இசையாகிய முகமன் வெஃகல் உடைத்து. துலாக்கோல், முகமன் கூறினும் கூறாவிடினும் ஒத்த தன்மையான் அஃது இன்று. ஆசிரியன் அழுக்காறு இன்மையின் மனம் அவன் வயப்பட்டு ஒழுகலின் புலம் வென்றோன் ஆகுதலானும், 1“இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.’’ |
என்றார் ஆகலின் புலம் வென்ற காட்சியுடையார்க்கு இலம் என்னும் கருத்து இன்மையானும், திங்களொடு ஞாயிறன்ன யாவதும் வெஃகா உள்ளம் உடையன். அக்குடம், பிறன்பொருளாய கழல் வெஃகல் உடைத்து, உரிமை வெஃகல் இன்று. அப்பனை, நூலோர்க்கு உரிமையாகிய ஏட்டினை வெஃகல் உடைத்து, நீர் வார்த்தல் முதலாயின வேண்டாமையின் பிறன்பணி வெஃகல் இன்று. அத்தெங்கு, நீர் வார்த்தலை வேண்டலின் பிறன் பணி வெஃகல் உடைத்து, முகமன் வெஃகல் இன்று. அப்பருத்தி, நீராகிய ஆதனத்து இருக்கும்வரை உலராமலும் அதனினின்று எடுத்து வெய்யிலில் போகட்டால் உலர்தலும் உடைமையின் ஆதனம் அளித்தல் முதலாகப் பிறர் செய்யும் முகமன் வெஃகல் உடைத்து.
1திருக்குறள் 174 |