பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்87

அப்பனை, காற்று ஒலிக்குமிடத்து வற்றிய ஓலையால் கலகலக்கும் ஆதலின் கல்வி பேணாமையும், கள் விளைப்போரது கனம் தாங்கி நிற்றலின் அது பேணலும் உடைத்து.

அத்தெங்கு, கள்ளாயினும் காயாயினும் அளியாமையின் ஏறுவார் இன்மையின் அவரது கனம் தாங்காமையான் அது பேணாமையும், தன் ஓலை முதலாயவற்றைப் பெற்றோர் பிறர்க்கு அளிப்பினும் தடாமையின் கொடுப்பது அழுக்கறாமையும் உடைத்து.

அப்பருத்தி, மக்கள் உடுக்கும் ஆடை அளித்தற்பொருட்டு வெளிவரக் கிளம்பிய பஞ்சினை வெளிவாராது தடுத்தலின் கொடுப்பது அழுக்கறுத்தல் உடைத்து. அக்குற்றத்தால் தானும் தன்சுற்றமும் பஞ்சிருந்தும் உடாதும் தான் நீர்மேல் கிடந்தும் உண்ணாதும் அழிதல் உடைத்து.

இனி வாய்மை இலக்கணம் உணர்ந்தார்க்கே.

1“அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
  னேதம் படுபாக் கறிந்து.’’

என்றார் ஆகலின் அதனை அறிதல்கூடும் ஆதலான், ஆசிரியன் அல்லாதான் வாய்மை இன்மையான் நால்வகைய அழுக்காறும் உடையான் என்பது பெறப்பட்டது.

இனி அழுக்காறு இன்மைக்கு வாய்மையே காரணம் ஆதலின் அதன்பின் அழுக்காறு இலாமை கூறப்பட்டது என்பது.

இனி அவாவின்மை வகை என்னை எனின்? பிறன்வேண்டும் பொருள் வெஃகலும், பிறன்வேண்டும் உரிமை வெஃகலும், பிறன் செய்யும் பணி வெஃகலும், பிறன் கூறும் முகமன் வெஃகலும் என, அந்நான்கனது இன்மையான் நால்வகைப்படும் என்பது.

அவற்றுள் மலை, எத்துணை கொள்ளினும் பெருக்கத்தில் தீராமையின் அதற்கு ஏதுவாகிய அழுக்காறு இன்மை பெறப்படுதலானும் அக்காரணத்தான் எரு இடல் நீர்ப்பாய்ச்சு முதலாயின ஒன்றும் வேண்டாதே வளன் ஈதலானும், பிறன்பொருள் வெஃகலின்று, காட்டின் உரிமையாகிய அரிமா, யானை, வரிமாப்புலி


1திருக்குறள் 164.