பக்கம் எண் :

86பாயிர விருத்தி

நிலம், எதிரொலியாமையின் கல்வி பேணலும் கதிர்க்கனம் தாங்காது நெற்பயிரைக் கீழ்ச்சாய்த்தலின் அது பேணாமையும் உடைத்து.

பூ, தும்பியின் கனம் தாங்கலின் அதுபேணலும், அத்தும்பி தேனைப் பிறிதொன்றற்குக் கொடாது ஓம்பற்பொருட்டு மெழுகு செய்யுமாறு தானே மகரந்தமும் கொடுத்தலின் கொடுப்பது அழுக்கறுத்தலும் உடைத்து அக்குற்றத்தால் தானே அன்றித் தன் சுற்றமும் உடுப்பதூஉம் உண்பதூஉமின்றிக் குளிரான் உடல் பனித்துப் பசியான் முகம்வாடி அழிவார்போல, தன் சுற்றத்துள் கன்னி எனப்படும் யோனிக் காக்கணம் முதலாயின பெண்மை குறிக்கும் உறுப்பும், மலரி முதலாயின ஆண்மை குறிக்கும் உறுப்பும் மறையுமாறு ஆடை உடாதும், தேன் தம்மிடத்து இருந்தும் உண்ணாதும், தானும் தன் சுற்றமும் உடல் பனித்து முகம் வாடி அழிதல் உடைத்து.

அக்கோல், பிறர்க்கு அளித்தலைத் தடாமையின் அவ்வழுக்காறு இன்று.

இனி ஆசிரியன் பிறர்க்கு நன்மையும் தீங்கின்மையும் கருதும் வாய்மை உடையன் ஆதலின், பிறர்க்கே அன்றித் தனக்கும் பெருந்தீங்கு விளைத்தேவிடும் அழுக்காறு கொள்ளான் ஆகலானும் அவன் உரையால் பிறர் கல்வி ஆக்கமொடு பிற ஆக்கமும் பெறலானும் அழுக்கற்று அகன்றாரும் இல்லை என்பது பொய்யா மொழி ஆதலின் அவன் கல்விப் பெருக்கத்தில் தீராமையானும்,

1“ஒளவிய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான்
 கேடு நினைக்கப் படும்’’

என்றார் ஆகலின், ஒருகால் அவன் செல்வப்பெருக்கம் தீர்ந்தானாயினும் அதற்கு ஏதுவாகிய பழவினை யாதென்று அறிவுடையாரான் ஆராயப்படுதலானும் திங்களொடு ஞாயிறன்ன யாவது மஃகா வன்பெனப்படும் அழுக்காறு இன்மை உடையன்.

அக்குடம் எதிரொலியாமையின் கல்வி பேணுதலும், தனக்குள் இருக்கும் மருந்தாகிய பருப்பினை வெளிக்காட்டாமல் மறைத்தலின் பொய் காணப்படலின் அக்காரணத்தால் பிறன் ஆக்கம் பேணாமையும் உடைத்து.


1திருக்குறள் 169.