பக்கம் எண் :

பண்புத் தொகை சூ. 20157

2) இருபெயரொட்டுப் பண்புத்தொகை-சாரைப்பாம்பு என்னும் இரண்டுக்கும் இடைப்பட்டதாக, 3) இருபண்பொட்டுப் பண்புத் தொகை ஒன்றும் கூறலாம். அந்த பண்புத் தொகையே கருநிறம், இன்சுவை முதலியன.

சாரைப்பாம்பு என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் சாரை என்னும் பெயரும் பாம்பையே குறிக்கிறது. பாப்பு என்னும் பெயரும் பாம்பையே குறிக்கிறது. பாம்பு என்பது பொதுப்பெயர்; சாரை என்பது பாம்பினங்களுள் ஒன்றைக் குறிக்கும் சிறப்புப் பெயராகும். இதுபோலவே கருநிறம் இன்சுவை போன்றவற்றையும் கொள்ளல் வேண்டும் கருநிறம் என்பதில் நிறம் என்பது (பாம்பு என்பதைப்போல) எல்லா நிறங்களையும் குறிக்கும் பொதுப்பெயர். கரு என்பது (சாரை என்பது போல) எல்லா நிறங்களுள் ஒன்றாகிய கறுப்பைக் குறிக்கும் சிறப்புப் பெயராகும். இன்சுவை என்பதில் சுவை என்பது எல்லாச் சுவைகளையும் குறிக்கும் பொதுப் பெயர். இன் என்பது இனிப்புச் சுவையைக் குறிக்கும் சிறப்புப் பெயர். எனவே, சாரைப்பாம்பு, ஆயன் சாத்தன் போன்றவற்றை இரு பெயரொட்டுப் பண்புத்தொகை எனக் கூறுவது போல, கருநிறம் இன்சுவை போன்றவற்றுக்கு இரு பண்பு ஒட்டுப் பண்புத் தொகை எனப்பெயரிட்டுப் பண்புத் தொகையை மூவகைப்படுத்தலாம்.

(ஒரு புதிய பார்வை-பண்புத் தொகைகளில் தொகுவன எவை-செந்தமிழ்ச்செல்வி சிலம்பு 60. பரல் 3, 4 1985)

சிவ

‘கருங்குதிரை’ என்பது கரியது குதிரை, கருமையாகிய குதிரை என இருவகையிற் பிரிக்கப்படும். கரியதாகிய குதிரை எனப் பிரிப்பதைச் சேனாவரையர் தவிர மற்றையோர் ஏற்பர். அவர்கள் பண்புத் தொகையாவது பண்மையுணர்த்தும் *ஐம்பால் ஈறுகள் தொகுவது என்பர். ன், ள். ர். து. அ என்பன ஐம்பாலீறுகள். கரியது என்பதில் துகரவீறு ஒன்றன் பால் எனும் பண்பு உணர்த்துவது. அது தொக்குக் கருங்குதிரை என வந்தது.


* ஐம்பாலீறுகள் பண்புணர்த்தும் என்றது பொருந்துமா?