பக்கம் எண் :

பண்புத் தொகை சூ. 20159

ஆசிரியர் தொல்காப்பியர் புணரியல் நிலையிடை புணரத்தோன்றா (எழு. குற். 77) என்றது, கருங்குதிரை கரும்பார்ப்பாண் போல்வனவற்றையே வட்டப்பலகை போல்வனவற்றைப் பிரித்துப் பிரித்துப் புணர்க்கலாம் என்பது ஆசிரியர் கருத்து. அதற்கேற்பவே அக + கை = அங்கை எனப் பிரித்துப்புணர்ந்தார். (எழு. புள்ளி. 20) இப்படிக் கருதியவர் நச்சினார்க்கினியர்.

வேற்றுமைத் தொகையில் வேற்றுமையுருபு தொக்கது. உவமத் தொகையில் உவமவுருபு தொக்கது உம்மைத்தொகையில் உம் தொக்கது. வினைத்தொகையில் வினைக்குரிய சிறந்த உறுப்பான காலம் காட்டும் உருபு தொக்கது. அவை போலப் பண்புத் தொகையில் பண்பைக்காட்டும் உருபு தொக்கதாகல் வேண்டும். பண்பு உருபு யாது?

பண்பெனப்படுவன அளவு, அறிவு, வடிவு, நிறம், கதி, சாதி, குடி, சுவை, சிறப்பு முதலியன. அவற்றுள் ஆசிரியரால் கூறப்பட்டன வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பன. மற்றையன பிற என்பதால் தழுவப்பட்டன. இப்பண்புகளைக் குறிக்கும் உருபுகள் அல்லது பொது உருபு என்ன? ஆசிரியர் கூறவில்லை.

சுந்தர-சண்முகனார் கொண்டவாறு வண்ணம் வடிவு முதலியவற்றையுணர்த்தும் சொற்கள் தொகுவதே பண்புத்தொகை எனக் கொள்வது மிகப்பொருந்தும். ஆனால் அவர் இருபண்பு ஒட்டுப் பண்புத் தொகையென மூன்றாவதாக ஒன்று கொள்வது இருபெயரொட்டுப் பண்புத் தொகையிலேயே யடங்கிவிடும் ஆதலின் தேவைதானா என்பது கருதற்குரியது.

ஆயன் சாத்தன் - இருபொருளொட்டுப் பண்புத்தொகை
சென்னை நகர் - ஈரிடவொட்டுப் பண்புத்தொகை
மாரிக்காலம் - இருகால வொட்டுப் பண்புத்தொகை
தலைச்சினை - இருசினையொட்டுப் பண்புத்தொகை
நடத்தல் தொழில்-இருதொழில் வொட்டுப் பண்புத்தொகை;

இப்படிப் பிறவும் கூறவேண்டுதலின் இருபண்பு ஒட்டுப்பண்புத்தொகையென ஒன்று தனியே வேண்டுவதில்லை யென்னலாம்.