பக்கம் எண் :

160தொல்காப்பியம்-உரைவளம்

உம்மைத் தொகை

411. இருபெயர் பலபெய ரளவின் பெயரே
 யெண்ணியற் பெயரே நிறைப் பெயர்க் கிளவி
யெண்ணின் பெயரோ டவ்வறு கிளவியும்
கண்ணிய நிலைத்தே யும்மைத் தொகையே       (21)
  
 (இருபெயர் பலபெயர் அளவின் பெயரே
எண்இயற் பெயரே நிறைப் பெயர்க் கிளவி
எண்ணின் பெயரோடு அவ்அறு கிளவியும்
கண்ணிய நிலைத்தே உம்மைத் தொகையே)

ஆ. மொ. இல.

Two nouns, many, nouns, noun of measurement,
noun of numerical order, noun of weight,
noun of number, these six words are said
to be conjunctive compounds.

பி. இ. நூ.

வீர. 49.

முன்மொழி அவ்வியம் சேர்தொகை பேர்முன் மொழித் தொகையே
சொன்மொழி அவ்வியபாவம் மருவும்; துவந்துவமும்
வன்மொழி யாம்இதரே தரம் வாய்ந்த சமாகாரமாம்
நன்மொழியான் உணர்ந்தார்கள் சமரசம் நறுநுதலே.

நேமி. சொ. 64.

உலைவில் உயர்திணைமேல் உம்மைத் தொகைதான்
பலர்சொல் நடைத்தாய்ப் பயிலும்-சிலை நுதலாய்
முற்றுமை எச்சப்படுதலும் உண்டாம் இடைச்சொல்
நிற்றலுமுண் டீறு திரிந்து.

நன் 368.

எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
எனுநான் களவையுள் உம்மில தத்தொகை.