பிரயோ. 23 முன்மொழிப் பேர்ச்சொல்லிடைச் சொல் லிரண்டு முரணி நிற்கும் நன்மொழி அவ்விய விபாவம் உம்மைச் சாகரத்திலே இன்மொழித் தெரந்தன் சமாகாரத்தோடு இதரே தரமாம் அன்மொழித் தோற்றம் சமுச்சயத்தோடும் அன்வாசயமே. இ. வி. 340. இருபெயர் பலபெயர் அளவின் பெயரே எண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி எண்ணின் பெயரோடு அவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே உம்மைத் தொகையே முத்து. ஒ. 99. எண்ணல் எடுத்தல் நீட்டல் முகத்தல் அளவையுள் உம்இலது அத்தொகை யாகும். இளம் என்பது இவ்வாறிடத்தும் உம்மை தொகற்பாலது என்று உணர்த்தியவாறு. இரு பெயர்க்கண் தொக்கது : உவாப் பதினான்கு என்பது. அது விரியுங்கால், உவாவும் பதினான்கும் எனவிரியும். பலபெயர்க்கண் தொக்கது : புலிவிற்கெண்டை என்பது; அது விரியுங்கால் புலியும், வில்லும், கெண்டையும் என விரியும். அளவு பற்றித் தொக்கது : தூணிப்பதக்கு என்பது. அது விரியுங்கால் தூணியும் பதக்கும் என விரியும். 1எண்ணியற் பெயர்பற்றித் தொக்கது ; பதினைவர் என்பது. அது விரியுங்கால் பதின்மரும் ஐவரும் என விரியும்.
1. எண் இயல் பெயர் என விரித்து எண்ணால் இயலும் பெயர் எனக் கொள்க. பதினைவர் என்பதில் அர் விகுதி பலர்பாலை யுணர்த்துகின்றது. பதின்மரும் ஐவரும் எனவிரியும் போது அவ்விரண்டும் எண்ணால் வருபெயர்களாம். |