பக்கம் எண் :

428தொல்காப்பியம்-உரைவளம்

பெறச் சொல்லப்பட்ட சொற்கள் எல்லாவற்றையும், பல்வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது-செம்பொருளவாய்ப் பலவாக வேறு படுத்திய விரிவுகளையுடைய அகத்தியத்திற் கூறிய நெறியில் தப்பாமல், சொல் வரைந்து அறியப் பிரித்தனர் காட்டல்-சொல்லை வேறுபடுத்து மாணாக்கன் உணருமாறு நுண்ணுனர்வுடையோர் உரையானும் காண்டிகையானும் பிரித்துக் காட்டுக, எ-று.

அங்ஙனம் உணரப் பிரித்துக் காட்டுமாறு என்னை? எனின், இரண்டாவது “வினையே வினைக் குறிப்பு அவ்விரு முதலிற்றோன்றும்” (வேற். 10) என்றதற்கு ‘மூவகையாகிய வினைச் சொல்லினும் வினைக் குறிப்புச் சொல்லினும் பிறக்கும் காரணங்கள் எட்டனுள் செயப்படு பொருட் கண்ணே இரண்டாவது தோன்றும் என்றும், அச்செயப் படு பொருள்கள்தாம் மூவகைய என்றும், மூன்றாவதற்கு ஓதிய வினைமுதல் இயற்றும் வினை முதலும் ஏவும் வினை முதலும் என இருவகைய என்றும், கருவி முதற் காரணமும் துணைக் காரணமும் என இருவகைய என்றும், நான்காவதற்கு ஓதிய கொடைப்பொருள் இருவகைய என்றும், ஐந்தாவதற்குப் பொருள் நால்வகைய என்றும், அதன் கண் பொருள் உறழ் பொருவும் உவமப் பொருவும் ஆம் என்றும் ஏதுகாரக ஏதுவும் ஞாபக ஏதுவும் ஆம் என்றும், ஆறாவதற்குத் தற்கிழமை ஐ வகைய பிறிதின்கிழமை மூவகைய என்றும், பிறவும் வேற்றுமை யோத்தினுட் பிரித்துக் காட்டினாம்.

இனி, ‘வினையெனப்படுவது’ (வினை. 1) எனப்பொதுப்படக்கூறிய முதல் நிலைகளை இன்னவாறு வரும் எனப்பிரித்துக் காட்டியும், அவை எடுத்தல் ஓசையான் முன்னிலை ஏவல் ஒருமை முற்றாய் நிற்கும் என்றும், 1கடத றக்கள் முதல் நிலையையடுத்து வருங்கால் இறப்பும், ஈற்றினையடுத்து வருங்கால் எதிர்வும் உணர்த்தும் என்றும், ‘நில் கின்று என்பன


1. உண்டன-உண்+ட் என டகரம் பகுதியை யடுத்து வந்து இறந்த காலம் காட்டியது. வந்தது-வா+த் எனத்தகரம் பகுதியையடுத்து இறந்தகாலம் காட்டியது இப்படிப் பிறவும். வருது என்பதில் வா+து எனத் தகரம் உகரத்துடன் அதாவது விகுதியுடன் சேர்ந்து எதிர் காலம் காட்டியது.