அதிகாரப் புறனடை சூ. 66 | 427 |
நெல்லரியும் இருந்தொழுவர் (புறம். 24) என்னும் புறப்பாட்டு முற்றுப் பெற்றடுக்கி வந்தது. 3ஒன்னாதார்க் கடந்தடூஉம் உரவுநீர் மாகொன்ற வென்வேலான் குன்றின்மேல் (கலி. 27) என்றவழியும் அடுக்கி வந்தது. 4வினைத் தொகைப் புறத்தும் உவமத் தொகைப் புறத்தும் பொருளொற்றுமைப்படாது அன்மொழித் தொகையாகிச் சான்றோர் செய்யுளகத்து வரின் இச்சூத்திரம் இடமாக அமைத்துக் கொள்க. ‘நின்னகண்ணியும் ஆர்மிடைந்தன்றே’ என்பது நின்னுடைய என்னும் பொருண்மைக்கண் ஒட்டி, 5அவ்வாய்பாடு குறித்து நின்றது. பிறவும் எடுத்தோதிய இலக்கணத்து மாறுபட்டு வருவன வுளவேல் இச்சூத்திரத்தான் அமைத்துக் கொள்க. ஒன்பதாவது எச்சவியல் முற்றும். சொல்லதிகாரம் - தெய்வச்சிலையார் உரை முற்றிற்று. நச் இஃது யான் விரித்துக் கூறாதனவற்றை விரித்துக் கூறிக் கொள்க என அதிகாரப் புறனடை கூறுகின்றது. இ-ள் : செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும் இவ்வதிகாரத்தின்கண் செய்யுளிடத்தும் வழக்கிடத்தும், மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம்-சிலவற்றிற்கு ஞாபகமாகப் பொருள்
3. அடூஉம், கொன்ற என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி ‘வென்வேலான்’ என்னும் பெயர் கொண்டன. 4. அன்மொழித் தொகையானது பண்புத் தொகை, வேற்றுமைத் தொகை, உம்மைத்தொகை என்னும் மூன்று பற்றி வரும் என ஆசிரியர் கூறினமையால் (எச்ச. 28) இவ்விரண்டும் புறனடையிற் கொள்ளப்பட்டன. 5. அவ்வாய்பாடு பெயரெச்ச வாய்பாடு. |