‘கடிப்பகை’ என்பது’ 1நான்காவதும், 2ஆறாவதும், கடியாகியபகை எனப் பண்பும் விரிந்தது’. ‘ஏழேகால்’ என்பது, ‘ஏழும் காலும்’ என உம்மையும், ‘ஏழேு கால் நிலமான் ஊர்’ என அன்மொழியும் விரிந்தது. 3‘சொல்லிலக்கணம்’ என்பது, ஆறாவதும் நான்காவதும் ஏழாவதும் விரிந்தது; சொல்லிலக்கணம் கூறிய நூல் என ஆகு பெயருமாய் நின்றது. 4‘பொன்மணி’ என்பது மூன்றாவதும், ஐந்தாவதும், ஏழாவதும் பொன்னும் மணியும் என உம்மையும் விரிந்தது. 5‘கருப்புவேலி’ என்பது நான்காவதும், ஆறாவதும், ஏழாவதும், மூன்றாவதும், ஐந்தாவதும் விரிந்தது. 6‘இயலிசை’ என்பது ஆறாவதும் ஏழாவதும், இயலும் இசையும் என உம்மையும் இயல் கின்ற இசை என வினையும், இயலாகிய இசை எனப்பண்பும் விரிந்தது. 7‘உரைவிரி’ என்பது ஆறாவதும், ஏழாவதும், நான்காவதும், இரண்டாவதும், ‘உரைக்கும் விரி’ என வினையும் உரை விரியையுடையது என அன்மொழியும் விரிந்தது.
1. கடிக்குப்பகை. 2. கடியதுபகை. (கடி-பேய்) 3. சொல்லது இலக்கணம் ஆறாவது. சொல்லுக்கு இலக்கணம் நான்காவது. 4. பொன்னாலாயமணி, பொன்னின் இயன்றமணி, பொன்னின் வைத்தமணி எனக்காண்க. 5. கரும்புக்கு வேலி, கருப்பினது வேலி, கரும்பின்கண் வேலி, கரும்பால் ஆயவேலி, கரும்பி்னின் வேலி எனக் காண்க. 6. இயலது இசை, இயலின்கண் இசை, எனக்காண்க. 7. உரையது விரி, உரைக்கு விரி, உரையை விரி எனக்காண்க. |