அதிகாரப் புறனடை சூ. 66 | 431 |
8கருத்துப் பொருள் என்பது இரண்டாவதும், மூன்றாவதும், ஐந்தாவதும், நான்காவதும், ஆறாவதும், ஏழாவதும், கருத்தும் பொருளும் என உம்மையும் விரிந்தது. 9சொற்பொருள் என்பது, மூன்றாவதும், நான்காவதும், ஐந்தாவதும், ஆறாவதும், சொல்லும் பொருளும் என உம்மையும், சொல்லாகிய பொருள் எனப்பண்பும் விரிந்தது. இவ்வாறே பிற சொற்களும் தொக்கு விரியுமாறு அறிந்து பிரித்துக்காட்டுக. ‘இவன்யார் என்குவை யாயின் இவனே’ (புறம். 13) என்னும் புறப்பாட்டினுள், சேரனை முன்னிலையாக்கி முடமோசியார் கூறுகின்ற காலத்து, ‘இதன்’ என்பது முன்னிலைப் படர்க்கையாய் நின்றது. இவ்வாறு வருவனவும் பிறவும் பிரித்துக் காட்டுக. கொல், செல், வெல் என்பன லகரம் னகரமாய்த் திரிந்து தனக்கேற்ற றகரவொற்றுப் பெற்றுப்பாலும் இடமும் காட்டும் ஆன் ஏறிக் கொன்றான், சென்றான், வென்றான் என நின்றன. சோறு சோறும், சேறு சேறும், வேறு வேறும் என்பன முதல் நிலை நீண்டு லகர வேற்றுக் கெட்டுத் தமக்குரிய ஒருமைத்தன்மையீறும் பன்மைத்தன்மையீறும் பெற்றுநின்றன. ‘வா’ என்பது வந்தான், வருகின்றான் என முதல் நிலை குறுகி கால எழுத்திற்கேற்ற இடைநிலை யெழுத்துப் பெற்று வந்தன. ‘கொள்’ என்பது கொண்டான், கோடு, கோடும் என ளகரம் ணகரமாயும் கெட்டும் முதல்நிலை நீண்டும் வந்தன.
8. கருத்தை விளக்கும் பொருள், கருத்தால் விளங்கும் பொருள், கருத்தினின்றும் விளங்கும் பொருள், கருத்துக்குப் பொருள், கருத்தினது பொருள், கருத்தில் உள்ள பொருள் எனக்காண்க. 9. சொல்லால் விளங்கும் பொருள், சொற்குப் பொருள், சொல்லிலிருந்து விளங்கும் பொருள், சொல்லது பொருள் எனக்காண்க. |