கை வாரம்போல்வானைக் ‘கைவாரி’ எனவும், திரு இல்லாதாளைத் ‘திருவிலி’ எனவும், அறிவு இல்லாதானை ‘அறுவிலி’ எனவும், நூல் ஓதினானை ‘நூலோதி’ எனவும் இவ்வாறே 1ஈறு திரிந்து வருவனவும் பிறவும் பிரித்துக் காட்டுக. 2வில்லி வாளி வினைக்குறிப்புமுற்று ஈறு திரிந்த பெயர். 3வலைச்சி, பனத்தி, வெள்ளாட்டி முதலியன சகரமும் தகரமும் டகரமுமாகிய இடைநிலை பெற்றன. 4சொட்டிச்சி, கணக்கச்சி முதலியன இச்சு என்னும் இடைநிலை பெற்றன. 5கணவாட்டி-இவ்வினைப் பெயர் டகரம் பெற்றது. இன்னும் இவ்வாறே வருவன பிறவும் பிரித்துக் காட்டுக. ‘கிள்ளிகுடி’ - கிள்ளியுடைய குடிமக்கள் இருக்கும் ஊர் எனவும், கீழ்வயிற்றுக்கழலை - கீழ்வயிற்றின்கண் எழுந்த 6கழலை போல்வான் எனவும் அன்மொழித் தொகையாம். ‘வடுகக் கண்ணன்’ வல்லொற்று அடுத்தால் ‘வடுக நாட்டிற் பிறந்த கண்ணன்’ என்றாம்; ‘வடுகங்கண்ணன்’ என மெல்லொற்று அடுத்தால் ‘வடுகனுக்கு மகனாகிய கண்ணன்’ என்றாம்.
1. கைவாரன், திருவிலான் அறிவிலான், ஓதினான் என்னும் னகர வீறு இகர வீறாகத் திரிந்தமை காண்க. 2. வில்லன், வாளன் என்பன அவ்வாறு திரிந்தன. 3. வலை+இ, பாண்+இ, வெள்ளாள்+இ எனப்பிரித்து இடைநிலைகள் பெய்து புணர்க்க. 4. செட்டி+இ, கணக்கன்+இ எனப்பிரிக்க. 5. கணவாள்+இ எனப்பிரிக்க. 6. கழலை - கட்டி (நோய்) |