பக்கம் எண் :

அதிகாரப் புறனடை சூ. 66433

‘நனி நீடுழந்தன்று மன்னே இனியே’ (குறுந். 149) என்பது 7பின்வருங்காலம் உணர்த்திற்கு.

‘இனி எம் எல்லை’ எனப் ‘பின்’ என்னும் இடம் உணர்த்திற்று.

ஏனோன் என்பது ஒழி பொருள் உணர்த்திற்று.

ஏதிலன் என்பது அயலான் என்னும் பொருள் உணர்த்திற்று.

8உண்ணா நின்றான் என்புழி ‘ஆ’ என்பது இடைநிலை எழுத்து என்று உணர்க.

வா, தா என்றாற் போல்வன, மறை யுணர்த்துங்கால் வாரான், தாரான்; வாராது போயினான், தாராது போயினான்; வாராத சாத்தன், தாராதசாத்தன் என முதல் நிலை குறுகாது நிற்கும் என்றுணர்க.

நன், தீ, சிறு, பெரு, வன், மென், கடு, முது, கிள, புது, பழ, இன், உடை, அன் என்பன முதலிய முதல் நிலைகள் மகர ஐகாரம் பெற்று, நன்மை, தீமை, சிறுமை, பெருமை என வினைக் குறிப்புப் பெயராய் நிற்குமாறும், இவைதாம் நன்று, தீது, சிறிது, பெரிது, வலிது, மெலிது, கடிது, முதிது, இனைது, புதிது, பழைது, இன்று, உடைத்து, அன்று என அஃறிணை வினைக் குறிப்பு முற்றாய் நிற்குமாறும்; நல்லன், தீயன், சிறியன், பெரியன், வலியன், மெலியன், கடியன், முதியன்;


7. இனி என்பது பின்வருங் காலம் உணர்த்திற்று

8. உண்ணா நின்றான் - உண் + ஆநின்று + ஆன் எனப் பிரிக்க. ஆ நின்று என்பதையே ஆ என்றார். உண்ணாது நின்றான் எனப் பொருள்படின் ஆ எதிர் மறை இடைநிலையாம்.