பக்கம் எண் :

434தொல்காப்பியம்-உரைவளம்

இளையன், புதியன், பழையன், இன்னன், உடையன், அல்லன் என ‘அன்’ பெற்று உயர்திணை வினைக் குறிப்பாய் நிற்குமாறும்; இவைதாம் ஆள் என்னும் ஈறு பெற்று முற்றாயும் படுத்தல் ஓசையான் வினைக் குறிப்புப் பெயராய் உருபு ஏற்றும் பயனிலை கொண்டும் நிற்குமாறும் பிரித்துக் கொள்க. இவ்வாறே ஏனைப் பால்களோடும் ஒட்டுக. இவை பண்பாய் நிற்குமாறும் உரிய என்றுணர்க. இவை தாமே நன்றாய் வளர்ந்தான், வளர்ந்தது, தீதாய்ப் போயினான், போயிற்று’ என வினையெச்சக் குறிப்பாமாறும்; ‘நல்ல சாத்தன், தீய சாத்தன்’ எனப் பெயரெச்சக் குறிப்பாமாறும் காண்க.

சிற, இழி, தீர் என்னும் முதல்நிலைகள் ‘அல்’ ஈறு பெற்றும் ‘அன்’ ஈறும் ‘ஆன்’ ஈறும் பெற்றும் முற்கூறியவாறே நிற்குமாறும்; சிறந்து, இழிந்து, தீர்ந்த எனவும் வினைக்குறிப்பும் (?) பெயரெச்ச வினைக்குறிப்பும் ஆமாறும் உணர்க. இவ்வாறு வருவன பிறவும் பிரித்துக் கொள்க.

‘சுடரிழாய் பன்மானும்’ (கலி. 47) என்புழி மான் என்னும் இடைச்சொல் பலபடியும் என்னும் பொருட்டாய் நின்றவாறு காண்க.

‘பிரிதல் வல்லியார் ஈதும் துறந்தோர்’ என்புழி, ‘வல்லாராய்’ என வினையெச்சமாய் நின்றவாறு காண்க.

‘கால்பொர நுடங்கல் கறங்கிசையருவி’ (கலி. 45) என்புழி 1நுடங்குதலையுடைய அருவி என நிற்குமாறு உணர்க. இவை போல்வன ஓசை வேற்றுமையான் வேறுபடுவனவும் உணர்ந்து கொள்க.

‘நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும்’ என்புழி, முன்னர் எல்லாரும் உளப் பாடாகக் கூறிய தோழி ஈண்டும் பல்லே முள்ளும் என்னாது தன்னை நீக்கிக் கூறியது என்னை (எனின், தலை மகன் தன்னை நோக்கி அழிவுதகக் கூறி ஆற்றானாகி நின்ற நிலைமையைக் கண்டும் அருள் பிறவாது ஆயமும் தலை


1. நுடங்குதல்-