பக்கம் எண் :

களவியல் சூ. 24383

இருவகையிடத்தையும் இருவகைக் காலத்தையுந் தாம் வரைந்து கூறும் நிலைமையைத் தவிர்த்து அவன் வயின் தோன்றிய கிளவியையும், பிறவும்-கூறியவாறன்றிப் பிறவாறாக அவன் வயின் தோன்றிய கிளவியையும், நாடும் ஊரும் இல்லுங் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ-அவன் பிறந்த நாடும் அதன் பகுதியாகிய குடியிருப்பும் அவ்வூர்க்கு இருப்பாகிய மனையும் பார்ப்பார் முதலிய நால்வகை வருணமும் அவ்வருணத்துள் இன்னவழி இவனென்றலும் ஒரு வயிற்றுப் பிறந்தோர் பலருள்ளுஞ் சிறப்பித்துக் கூறலும் பிறரின் ஒவ்வாதிறந்தனவாதல் நோக்கித் தலைவனிடத்தே தோழி கூறிய கிளவியோடே கூடி, அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்-அத்தன்மைத்தாகிய நிலைமையின் கூறுபாட்டானே வரைந்து கோடலை விரும்பிய வழி யும், தோழி மேன கிளவி.

‘பகற் புணர்களனே’ (132) ‘இரவுக் குறியே’ (131) குறி ‘யெனப்படுவது’ (130) என்னுஞ் சூத்திரங்களாற் களனும் பொழுதும் உணர்க.

“புன்னை காத்து மன்ன மோப்பியும்
பனியிருங் கானல் யாம்விளை யாட
மல்லலம் பேரூர் மறுகின்
அல்கலு மோவா தலரா கின்றே” 1

இது பகற்குறி விலக்கியது.

“நெடுமலை நன்னாட நின்வேல் துணையாக்
கடுவிசை வாலருவி நீந்தி-நடுவிரு
ளின்னா வதர்வர வீர்ங்கோதை மாதராள்
என்னா வாளென்னு மென்னெஞ்சு”2      (ஐந்-ஐம்-19)

இஃது இரவுக்குறி விலக்கியது.


1. கருத்து: புன்னையின் கீழிருந்து புனம்காத்தும் அன்னத்தை ஓட்டியும் இப்படிக் குளிர்ந்த கானலிடத்து யாம் விளையாட ஊர்த் தெருவில் நாளும் அலராகா நின்றது.

2. கருத்து: மலைநாட! நடுஇரவில் வேல் துணையாக அருவி நீந்திக் கொடிய வழியில் நீ வர, குளிர்ந்த மாலையுடைய எந்தோழி என் ஆவளோ என்று வருந்தும் என்நெஞ்சம்.